Published:Updated:

உவரி கிராமத்தில் உதயகுமார்; உருமாறும் போராட்ட வடிவம்

உவரி கிராமத்தில் உதயகுமார்; உருமாறும் போராட்ட வடிவம்
உவரி கிராமத்தில் உதயகுமார்; உருமாறும் போராட்ட வடிவம்

நெல்லை: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராடி வரும் போராட்டக் குழுவினர், தற்போது கடற்கரை கிராம மக்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக படகு மூலம் உவரி கடற்கரை கிராமத்துக்கு சென்ற உதயகுமார் உள்ளிட்ட குழுவினர் அந்த மக்களிடம் அணு உலை குறித்து விளக்கி பேசினார்.

உவரி கிராமத்தில் உதயகுமார்; உருமாறும் போராட்ட வடிவம்

கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி இடிந்தகரை கிராமத்தில் 636-வது நாளாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பில், அணு உலை செயல்பட தடை இல்லை என தெரிவிக்கப்பட்டதால், இடிந்தகரையில் நடக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்டக் குழு திட்டமிட்டு உள்ளது.

உவரி கிராமத்தில் உதயகுமார்; உருமாறும் போராட்ட வடிவம்

இதற்காக பல்வேறு தரப்பு மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையிலான குழுவினர் இறங்கி உள்ளனர். கடந்த 2012 மார்ச் 18ஆ-ம் தேதிக்கு பின்னர் போராட்டக் குழுவினர் இடிந்தகரை கிராமத்தை விட்டு வெளியே செல்லவே இல்லை.

இந்த நிலையில், உதயகுமார் தலைமையிலான அக்குழுவை சேர்ந்த புஷ்பராயன், முகிலன், மைபா ஜேசுராஜ் நேற்று கடற்கரை கிராமமான உவரிக்கு படகு மூலம் சென்றனர். அவர்களுடன் இடிந்தகரையை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.

அங்குள்ள ஆலயத்தின் முன்பாக மக்களை திரட்டிய அக்குழுவினர், அணு உலையை எதிர்ப்பது ஏன்? என்பது பற்றி விளக்கி பேசியதுடன் அந்த மக்களின் ஒத்துழைப்பையும் கேட்டனர். உவரி மக்களிடம் உதயகுமார் பேசுகையில், வளர்ச்சி திட்டம் என்கிற பெயரில் இயற்கை வளத்தையும் நமது வாழ்வாதாரத்தியும் சீரழிக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நம் மீது திணிக்கின்றன. அணு கதிர்வீச்சால் ஏற்படும் ஆபத்து பற்றி நாம் எடுத்து வைத்த கருத்துக்களை அதிகார வர்க்கம் ஏற்க மறுக்கிறது. அணு சக்தி துறையும் நீதிமன்றமும் நம்மை கைவிட்டு விட்டாலும் நமது போராட்டம் முன்பு இருந்ததை காட்டிலும் வீரியத்துடன் தொடரும்.

உவரி கிராமத்தில் உதயகுமார்; உருமாறும் போராட்ட வடிவம்

நமது போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகுகிறது. மாணவர்கள் நமது போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்திருப்பதால் நமக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். இந்த சமயத்தில், அணு உலைக்கு அருகில் இருக்கும் அனைத்து மக்களும் ஒன்று திரண்டால் தான் இந்த திட்டத்தை நிறுத்த முடியும். யானைக்கு தனது பலம் தெரியாதது போல மக்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்க்கும் பணியில் இறங்கி விட்டோம்.

உவரி கிராமத்தில் உதயகுமார்; உருமாறும் போராட்ட வடிவம்

முதல் கட்டமாக உவரி கிராமத்தில் மக்களை ஒன்று திரட்டும் பணி நடக்கிறது. இனி இதே போல கடல் மார்க்கமாக சென்று அனைத்து மக்களிடத்திலும் அணு உலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை செய்வோம். வரும் 14-ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் அந்தந்த ஊர்களிலேயே ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். கூடங்குளம் மற்றும் அதை சுற்றிலும் இருக்கும் கிராமங்களில் கடையடைப்பு நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். எங்களுடைய போராட்டம் இனி தீவிரம் அடையும் என்று பேசினார்.

##~~##
மாலையில் மீண்டும் அவர் இடிந்தகரை கிராமத்துக்கு சென்று விட்டார். போராட்டக் குழுவினர் வெளி இடங்களுக்கு செல்ல இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இடிந்தகரை ஊரின் எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் பரபரப்பாக இருந்தது.
ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்