Published:Updated:

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு!

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு!
பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு!

ராமநாதபுரம்: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால், ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு!

சென்னையிலிருந்து தென் கிழக்கே, 850 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருக்கும்

##~~##
மகாசேன் புயல் அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, மியான்மர், வங்கதேச கடலோரத்தில் கரையேறும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதனால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லையென்றாலும், தமிழக கடலோரப்பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்குமென்று, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் உள்ள வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிப்பதற்காக, 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு பாம்பனில் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது, மீன் பிடி தடை காலம் அமலில் இருந்தாலும், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியும், படமும்:
உ.பாண்டி