Published:Updated:

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தென் மேற்கு பருவமழை தொடங்குகிறது

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான மகாசேன் புயலால் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திசை மாறி வங்க தேசம் - மியான்மர் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் புயல் தாக்குதலில் இருந்து சென்னை தப்பியது.

இதனிடையே, மகாசேன் புயல் தமிழகத்தின் மீதான ஈரப்பதத்தை உறிஞ்சி செல்வதால் அடுத்த சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

##~~##
இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பி.சி.எஸ்.ராவ் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தென் மேற்கு பருவ மழை இன்னும் 3 நாள் அல்லது அடுத்த வாரத்தில் முன் கூட்டியே தொடங்கிவிடும் என்றும், இந்த ஆண்டு மழை சராசரியாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.