Published:Updated:

என்ன கேட்காம எப்படி என்னை பெத்தீங்க! - இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இளைஞர்

என்ன கேட்காம எப்படி என்னை பெத்தீங்க! - இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இளைஞர்
என்ன கேட்காம எப்படி என்னை பெத்தீங்க! - இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இளைஞர்

துன்புறுத்துகிறார்கள், சொத்துப் பிரச்னை போன்ற பலவிதமான வழக்குகள் பெற்றோர்கள் மீது பதிவு செய்யப்பட்டு நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மும்பையைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் வித்தியாசமான காரணத்துக்காக தன் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யவுள்ளார். அவரின் காரணம் மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.

அது  ‘என் அனுமதியில்லாமல் ஏன் என்னைப் பெற்றெடுத்தீர்கள்’ என்பதுதான். ரபேல் சாமுவேல் என்ற இளைஞர்தான் இப்படி ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கான விளக்கத்தைக் கூறும் அவர், ‘அண்டினாடலிசம் (Antinatalism) என்பது ஒரு சிந்தனை. அது மக்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்ளக்கூடாது எனத் தூண்டும். அப்படி குழந்தைகள் பெற்றுக்கொள்வதினால் அந்தக் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவார்கள்’ எனக் கூறியுள்ளார். ரபேல் சாவேல் இந்தக் கொள்கையை தீவிரமாகப் பின்பற்றி வந்துள்ளார். இதற்கு ஆதரவாக தன் சமூக வலைதளப்பக்கத்தில் பல கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

தன் பெற்றோர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவுள்ளார் என்ற காரணத்தையும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ நான் என் பெற்றோரை நேசிக்கிறேன். ஆனால், தங்களின் மகிழ்ச்சிக்காக அவர்கள் என்னைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். இருவரின் சுகத்துக்காக நான் பாதிக்கப்படவேண்டுமா? உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பம் இல்லாமலே பிறக்கிறார்கள். அதனால் நம் அனுமதியில்லாமல் நம்மைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு நாம் கடன்பட்டிருக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் LatestLY என்ற ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘ இந்தப் பூமியில் இனப்பெருக்கம் என்பது நாசிச செயல் ஆகும். யாரிடமாவது ஏன் குழந்தை பெற்றுக்கொள்கிறீர்கள் எனக் கேட்டுப்பாருங்கள். அவர்களின் பதில் ’எங்களுக்குத் தேவை நாங்கள் பெற்றுக்கொள்கிறோம்’ என்பதாக மட்டும்தான் இருக்கும். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துவது மிகவும் தவறான ஒன்று. சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி மக்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டனர். ஏனெனில் அவர்களே இந்த உலகில் வாழச் சிரமப்படுகிறார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தன் மகனில் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சாமுவேலின் தாய், ‘ எங்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற என் மகனின் முடிவை நான் பாராட்டுகிறேன். நானும் என் கணவரும் வழக்கறிஞர்கள்தான். அவரின் சம்மதத்தைப் பெற்று அவரை எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்பதை சாமுவேல் நீதிமன்றத்தில் தெளிவாக விளக்கினால் நாங்கள் எங்கள் தவற்றை ஒப்புக்கொள்கிறோம். பூமிக்கு பாரமாக உள்ளோம் என்ற அவரின் கருத்து மற்றும் அதற்கு எதிராகத் துணிச்சலாக அவர் போராடுவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் சாமுவேல் இந்த உலகில் மகிழ்ச்சியைத் தேடி கண்டுபிடிப்பான்” எனப் பதிவிட்டுள்ளார். ரபேல் சாமுவேலின் கருத்துக்கு சமூக வலைதளத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.