Published:Updated:

ராசாவை சாட்சியாக அழைப்பது சட்ட விரோதம்: சாக்கோ சொல்கிறார்!

திருவனந்தபுரம்: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன் ஆஜராக ஆ.ராசாவை அழைப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அந்த குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ கூறினார்.

கேரளா மாநிலம், திருச்சூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதால்,அவரை கூட்டுக்குழு முன் சாட்சியாக அழைக்க முடியாது என்றும் அவ்வாறு அழைப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது பிரிவுக்கு எதிரானது என்றும் சாக்கோ கூறினார்.

##~~##
எதிர்க்கட்சிகள் தம்மை பதவி விலக கூறுவதும், ராசாவை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்துவதும் அரசியல் நாடகம் என்று அவர் குற்றம்சாட்டினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் அடுத்தக்கூட்டம் ஜூன் முதல் வாரம் நடைபெறும் என்று சாக்கோ கூறினார்.