Published:Updated:

சென்னை, பெங்களூரில் பிரபல நகைக்கடைகளில் ஐடி சோதனை

சென்னை, பெங்களூரில் பிரபல நகைக்கடைகளில் ஐடி சோதனை
சென்னை, பெங்களூரில் பிரபல நகைக்கடைகளில் ஐடி சோதனை
சென்னை, பெங்களூரில் பிரபல நகைக்கடைகளில் ஐடி சோதனை

சென்னை: சென்னை, பெங்களூரில் உள்ள பிரபல நகைக்கடைகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அட்சய திரிதியையொட்டி சென்னை உள்பட நாடு முழுவதும் நகைக்கடைகளில் நகைகளை பொதுமக்கள் வாங்கி குவிந்தனர்.

குறிப்பாக சென்னை, பெங்களூர், ஹைராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அதிகமாக நகைகள் விற்பனையாகியுள்ளன. வழக்கத்திற்கு மாறாக 20 சதவீதம் கூடுதலாக நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, பெங்களூர், ஹைதராபாத், சென்னையில் உள்ள பிரபலமான அந்த நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனை  நடத்தி வருகின்றனர்.

இந்த நகைக்கடைகளை இழுத்து மூடிய அதிகாரிகள், நகைகளின் இருப்பு, விற்பனை குறித்து விசாரித்து வருகி்ன்றனர்.

##~~##
சென்னை தியாகராயர் நகரில்  உள்ள இரண்டு பிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்து வருவதால் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என்றும் தெரிகிறது.
இதனிடையே, இந்த நகைக்கடைகளுக்கு சொந்தமான ஓட்டல்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.