Published:Updated:

குமரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை குறள் வழி சாலையாக அறிவிக்க கோரிக்கை

குமரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை குறள் வழி சாலையாக அறிவிக்க கோரிக்கை
குமரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை குறள் வழி சாலையாக அறிவிக்க கோரிக்கை
குமரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை குறள் வழி சாலையாக அறிவிக்க கோரிக்கை

மதுரை: குமரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை குறள் வழி சாலையாக அறிவிக்க வேண்டும் என்று மதுரையில் உள்ள தமிழர் ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மதுரையில் தமிழ் தாய்க்கு சிலை நிறுவப்படும் என அறிவித்த முதல்வருக்கு மதுரையில் உள்ள தமிழர் ஆய்வு மையம் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் சி.சே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்"தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விதி எண் 110 ன் கீழ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்க நாட்டின் பெருமையையும், புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல், தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக்கலைத்திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.

##~~##
மேலும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் மற்றும் பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி கொடிகளுடன் தமிழ்த்தாய் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வெளிநாட்டு தமிழறிஞர் ஜி.யு. போப் தமிழ்த்தொண்டை போற்றும் வகையில், சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவருக்கு ஜி.யு. போப் விருதும், சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உமறுப்புலவர் விருதும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகளை தமிழர் ஆய்வு மையம் மனதார பாராட்டுகிறது. இந்த அறிவிப்பை விரைவில் செயல்படுத்த வேண்டும். தற்போதுள்ள தமிழக சூழலில் சாதி, மதம் கடந்து ஐவகை நில மக்களுக்குள் ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

தமிழர் ஆய்வு மையம் பல ஆண்டுகளாக குறள் வழிச் சாலை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக குமரி முதல் சென்னை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில்  குறளின் 133 அதிகாரத்தை மையப்படுத்தி வழி நெடுக பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும்.

அப்பகுதி சார்ந்த வரலாறுகள் அப்பூங்காக்களில் நிறுவப்பட வேண்டும் என கோரி வருகிறது. இதையும் தாங்கள் நடைமுறைப்படுத்தி தமிழ் சமூகத்தை குறள் நெறியுள்ள சமூகமாக உலகிற்கு பறை சாற்ற வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்"எனக் கூறியுள்ளார்.