Published:Updated:

நிரவ் மோடியை விட்டுவிடக் கூடாது!

நிரவ் மோடியை விட்டுவிடக் கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
News
நிரவ் மோடியை விட்டுவிடக் கூடாது!

நிரவ் மோடியை விட்டுவிடக் கூடாது!

ஹலோ வாசகர்களே..!

நிரவ் மோடியை விட்டுவிடக் கூடாது!


பொதுத் துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து ஏமாற்றி விட்டு, லண்டனுக்குத் தப்பியோடி அங்கு சொகுசு வாழ்க்கை நடத்திவரும் நிரவ் மோடியைக் கைது செய்திருக்கிறது இங்கிலாந்து காவல் துறை. ரூ.5 லட்சம் யூரோவினைப் பிணையமாகக் கொடுக்கத் தயார் என அவர் தரப்பில் வாதாடியபின்னும் அவருக்கு ஜாமீன் தர மறுத்து, வருகிற 29-ம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளது இங்கிலாந்து நீதிமன்றம்.

நிரவ் மோடியை விட்டுவிடக் கூடாது!



இங்கிலாந்தின் இந்தச் செயலுக்காக அந்த நாட்டின் நீதித் துறையினை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். காரணம், ஒரு குற்றவாளி தன்னுடைய நாட்டிலிருந்து தப்பித்து, வேறொரு நாட்டுக்குள் புகுந்துவிட்டால், அவரை அந்த நாட்டிலிருந்து கொண்டுவருவது மிகவும் கடினம். குற்றவாளி தஞ்சம் புகுந்திருக்கும் நாட்டின் அனுமதியும், ஆதரவும் இல்லாமல் அவரை அங்கிருந்து கொண்டுவரவே முடியாது. இந்திய அரசின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் விஜய் மல்லையாவையும், நிரவ் மோடியையும் நம் நாட்டுக்கு அழைத்துவந்துவிட வேண்டும் என நமது அரசாங்கமும் எவ்வளவு முயற்சி செய்தது. அதன் பலனாக, இங்கிலாந்து அரசாங்கம் நிரவ் மோடியை மட்டும் கைது செய்திருக்கிறது.

நிரவ் மோடியை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமெனில், இன்னும் பல மாத காலமாகலாம் என்று சொல்கிறார்கள் சட்ட நுணுக்கம் தெரிந்தவர்கள். இன்னும் எத்தனை மாத காலமானாலும், நிரவ் மோடியை நம் நாட்டுக்கு அழைத்துவந்து, விசாரிக்கத் தேவையான நடவடிக்கையை நமது அரசாங்கம் எடுக்கத் தவறக்கூடாது. காரணம், அவரை மட்டும் இங்கிலாந்திலிருந்து நம் நாட்டுக்கு வெற்றிகரமாகக் கொண்டுவந்துவிட முடியுமெனில், விஜய் மல்லையாவையும் இங்கிலாந்திலிருந்து நம்மால் கொண்டுவர முடியும்.

இந்த இருவரையும் நம் நாட்டுக்குக்கு நாடு கடத்திக்கொண்டு வருவதன்மூலம் அவர்கள் நமது பொதுத் துறை வங்கிக்குத் தரவேண்டிய கடன் பாக்கி முழுக்கத் திரும்பக் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. என்றாலும், இனியும் பொதுத் துறை வங்கிகளை ஏமாற்றிவிட்டு, உலகின் எந்த நாட்டுக்கும் சென்று ஒளிந்துகொள்ள முடியாது என்கிற பாடத்தை ஏமாற்ற நினைக்கிற  அனைவருக்கும் நம்மால் கற்றுக்கொடுக்க முடியும். அதுமட்டுமல்ல, பொதுத் துறை வங்கிகளை ஏமாற்ற நினைக்கும் உள்ளூர் மோசடிப் பேர்வழிகளுக்கும் இந்த நடவடிக்கை சரியான எச்சரிக்கையாக இருக்கும். 

பிசினஸில் ஏற்படும் தோல்வி காரணமாக வங்கியில் வாங்கிய கடன் பணத்தைத் திரும்பத் தரமுடியாமல் போனால், அந்தக் காரணத்தைச் சொல்லி, தாராளமாகப் போராடலாம். அதை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு ஓடி ஒளிந்துகொள்ள நாம் எந்தவிதத்திலும் அனுமதிக்கக்கூடாது. வங்கிகளில் இருக்கும் மக்கள் பணத்தை வாங்கி ஏமாற்ற நினைப்பவர்களுக்கும், அதற்குத் துணை போகிறவர்களுக்கும் கடுமையான தண்டனை அளித்தால்தான், வாராக் கடன் என்கிற பிரச்னை இனியும் வராமல் இருக்கும்!

- ஆசிரியர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz