Published:Updated:

பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?

பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?

சுழன்றடிக்கும் சர்ச்சைகள்... விடைதெரியாத கேள்விகள்...

பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?

சுழன்றடிக்கும் சர்ச்சைகள்... விடைதெரியாத கேள்விகள்...

Published:Updated:
பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?

‘முகிலன் எங்கே?’ கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகச் சுழன்றுவரும் இந்தக் கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், முகிலன் காணாமல் போனதுக்குச் சொந்தப் பிரச்னைகள்தான் காரணம். பெண் விவகாரத்தில் சிக்கிய முகிலன் தலைமறைவாக இருக்கிறார்’ என்கிற சர்ச்சை வேகமாகச் சுழல ஆரம்பித்துள்ளது.

சென்னையில் கடந்த பிப்ரவரி 15 அன்று, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் முகிலன். அப்போது, ஸ்டெர் லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது வெடித்தக் கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு ஆலை, அரசு மற்றும் போலீஸ்தான் காரணம் என்பதை நிரூபிக்கக் கூடிய முக்கியமான ஆவணங்கள் அடங்கிய ஒரு குறும் படத்தை வெளி யிட்டார். அதன்பிறகு மதுரைக்கு ரயில் மூலமாகக் கிளம்பியதாகச் சொல்லப்பட்ட நிலையில்தான் மாயமாகிவிட்டார். காவல்துறையின்மீது சந்தேக ரேகைகள் படிந்திருந்த சூழலில், ‘சொந்த விஷயங்கள் காரணமாகவும் அவர் தலைமறைவாகியிருக்கக் கூடும்’ என்று ஆரம்பத்திலிருந்தே உலா வந்துகொண்டிருந்த ஒரு தகவல், தற்போது பொதுவெளியில் விவாதிக்கும் விஷயமாக மாறிவருகிறது.

பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?

‘போலீஸ்தான் கடத்தியிருக்கும். ஓரிரு நாள்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவார்கள்’ என்று பலரும் நினைத்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டங்களில் இறங்க, விவகாரம் பரபரப்பானது. உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி டிஃபேன். வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ்வசம் ஒப்படைக்கப் பட்டது. இதுவரை ஒரு ‘க்ளு’கூடக் கிடைக்கவில்லை என்ற போலீஸார், முகிலன் புகைப்படத்துடன், ‘காண வில்லை’ போஸ்டர்கள் ஒட்டியுள் ளனர்.

இந்நிலையில்தான், ‘பெண்களு டனான தொடர்பில் ஏற்பட்ட பிரச்னையால்தான் தலைமறைவாக இருக்கிறார்’ என்கிற தகவல்கள் அவருடைய நட்பு வட்டங்களிலேயே விவாதமாக மாறியுள்ளது. அதேசமயம், ‘இதெல்லாமும் போலீஸே திட்டமிட்டுக் கிளப்பிவிடும் விஷயங்கள் தான். போராளிகள்மீது சேற்றை வாரி இறைத்து முடக்கிப்போடும் தந்திரத்தை போலீஸ் மேற்கொண்டுள்ளது’ என்று எதிர் விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. இதற்கிடையே பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த ‘தமிழகத் தேசிய விவசாயிகள் சங்க’ மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.சுப்பிரமணி நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இவருடைய அமைப்பில் முகிலனும் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஈரோடு மாவட்டம், சென்னிமலை கிராமத்தில் கசாப்புக்கடை நடத்திவந்தவர், ‘கசாப்புக்கடை சண்முகம்’. இந்த ஊரில் ஆசிரியர் மூர்த்தி,

கி.வே. பொன்னையன் ஆகியோர் அச்சகம் நடத்தி வந்தனர். ஆசிரியர் மூர்த்திக்குப் பணி இடமாறுதல் கிடைக்கவே, அச்சகத்தின் தன் பங்கை சண்முகத்துக்கு விற்றுவிட்டார். அச்சகத்தை நடத்தி வந்த சண்முகம், பூங்கொடியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்த சண்முகம்தான் முகிலன் என்று பெயர் மாற்றம் செய்துகொண்டார். யாராவதுப் பொதுநல இயக்கம் நடத்திவந்தால் இணைந்து பணியாற்றும் முகிலன், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வார். முன்பு அதே அச்சகத்தில் வேலை செய்த ஒரு பெண்ணைக் காதலித்துப் பிரச்னை ஏற்பட்டது, கி.வே. பொன்னையன் தலையிட்டுத்தான் தீர்த்துவைத்தார்.

பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?

கூடங்குளம் போராட்டத்துக்காக இடிந்தகரை சென்றபோது, ஒரு பெண்ணைக் காதலித்துப் பிரச்னையானது. சுப.உதயகுமாரனுக்குக்கூட இதெல்லாம் தெரியும். உயர் போலீஸ் ஐ.ஜி-யான ஸ்ரீதர் வரை இது தெரியும். இதற்குப் பிறகும்கூட இரண்டு பெண்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது. பிறகுதான் காவிரி ஆறு மீட்பு குழு போராட்டத்தில் பணியாற்றிய ராஜேஸ்வரி யுடன் (இசை) நெருங்கிப் பழகிக்கொண்டிருக்கிறார் என்று சர்ச்சைக் கிளம்பியது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது, மதுரை அருகே 30 போலீஸ்காரர்கள் தன்னை அடித்துக் கையை உடைத்துவிட்டதாக முகநூலில் பதிவு போடச் சொன்னார். நானும் அப்படியே போட்டேன். ஆனால், நேரில் சந்தித்தபோது, வெறுமனே ஒரு கட்டு போட்டிருந்தார். கை உடைந்தது போல தெரியவில்லை. மருத்துவ மனைக்குச் சென்று வைத்தியம் பார்க்க அழைத்தபோதும் மறுத்துவிட்டார். மூன்று நாள்களுக்குப் பின்பு கட்டை அவிழ்த்துவிட்டு வந்தார். கை உடைந்திருந்தால் உடனடியாக எப்படி சரியாகும் என்கிற என் கேள்விக்குப் பதில் இல்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் உக்கிரமாக நடந்த சூழலில், சிறையில் இருந்தார் முகிலன். ஜாமீன் பெறாமல் உள்ளேயே இருந்தவரை நேரில் சந்தித்து, ‘நல்ல போராட்ட வீரன், இதுபோன்ற நேரத்தில் சிறையில் இருக்கக் கூடாது. ஜாமீன் பெற்று வீதிக்கு வந்து போராட வேண்டும்’ என்றபோதும் வரவில்லை. நாங்குநேரி மற்றும் வள்ளியூர் நீதிமன்றங்கள் சொந்த ஜாமீனில்விட விரும்பிய பின்னரும் அவர் வரவில்லை.

இந்தநிலையில்தான் தன்னைப் பற்றிய விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்கவில்லை என்றால் பொதுவெளியில் அனைத்தையும் சொல்லப்போவதாக  ராஜேஸ்வரி கூறிவருகிறார். தன்னுடைய நட்பு வட்டத்தின் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தி இதை நீர்த்துப்போகச் செய்துவிடலாம் என்று முகிலன் நினைத்திருக் கலாம். ஆனால், அதுமுடியாத சூழலில், சமூகப் போராளியான தனக்கு அவமானம் என்று முடிவெடுத்து, முகிலன் தலைமறைவாகி யிருக்கலாம்” என்றார் சுப்பிரமணியன்.

இதுகுறித்து ராஜேஸ்வரியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுப்பதாக இல்லை” என்று சொன்னார்.

தனக்கும் முகிலனுக்கும் இடையே நடந்த பல விஷயங்கள் தொடர்பான தகவல்கள், ஆவணங் களை நம்பிக்கையானவர்களிடம் கொடுத்து வைத்திருக்கிறாராம் ராஜேஸ்வரி. இருவருக்கும் பொதுவான நட்பில் இருப்பவர்கள் மூலமாக பஞ்சாயத்து நடப்பதாகவும் கேள்வி. ஆந்திராவில் எங்கோ ஓரிடத்தில் முகிலன் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இசை என்கிற ராஜேஸ்வரிமீது முகநூலில் காட்டமான பதிவுகளை முகிலனின் ஆதரவாளர்கள் வெளியிட்டுவரும் சூழலில், தானும் பதிலடியாகப் பதிவுகளை வெளியிட ஆரம்பித்துள்ளார் ராஜேஸ்வரி!

அரசியல்வாதிகளில் பலரும் தவறானவர்களாக இருப்பதால்தான், இந்தச் சமூகத்துக்குப் போராளிகள் தேவைப்படுகிறார்கள். அதனால், போராளிகள் என்பவர்கள் எப்போதுமே வெளிப் படையாகவும், நேர்மையாகவும், தூய்மையாகவும் இருப்பதுதான், சமூகத்தை நேர்ப்படுத்தும். ஆனால், முகிலன் மீதான புகார்கள்... போராளி சமூகத்தின் மீதும் சந்தேக ரேகைகளைப் படர விட்டுள்ளது. முகிலன் வெளியில் வந்து தன் மீதான புகார்கள் அனைத்துக்கும் பதில் சொல்லும் போதுதான் அந்தச் சந்தேக ரேகைகள் விலகும்!

- ஆண்டனிராஜ், இரா.தேவேந்திரன், நவீன் இளங்கோவன்
படங்கள்: எல்.ராஜேந்திரன், ரமேஷ் கந்தசாமி

பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?

‘‘ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் கடத்தியிருக்கிறார்கள்!’’

மு
கிலனின் மனைவி பூங்கொடியைச் சந்தித்தபோது, “எனக்கு உடல்நிலை சரியில்லை. என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்று பேச மறுத்தார். அடுத்த சில நாள்களிலேயே, ஒரு பத்திரிகையாளரிடம் வெளிப் படையாகவே பேசியிருக்கிறார். அதில், “கடந்த பிப்ரவரி 13-ம் தேதி வீட்டுக்கு வந்த முகிலன், இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்தார். பிறகு, பிப்ரவரி 15 அன்று சென்னையில் அந்த வி.சி.டி-யை வெளியிட்டார். அன்றைய தினமே ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உள்ள ஊழியர் ஒருவர், ‘தூத்துக்குடிக் கலவர ஆதாரங்கள் இருந்தால் எங்களிடம் கொடுங்கள். ஏன் நீதிமன்றத்தில் கொடுத்தீர்கள்?’ என்று தன்னிடம் கேட்டதாக உடன் இருந்தவர்களிடம் முகிலன் தெரிவித்துள்ளார். ஆனால், என் கணவரின் வளர்ச்சியைப் பொறுக்கமுடியாமல் சிலர் பெண்களுடன் இணைத்து அவதூறு பரப்பிவருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களே போலீஸ் துணையுடன் என் கணவரைக் கடத்தி வைத்திருக்கலாம். தேர்தல் முடிந்த பிறகு விட்டுவிடுவார்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?

இசையின் பதிவுகள்!

மு
கிலன் காணாமல் போவதற்கு சில தினங்களுக்கு முன் தன் ஃபேஸ்புக்கில் இசை என்கிற ராஜேஸ்வரி, ‘சிலருடைய முகத்திரை சீக்கிரமே கிழியும்’ என்பதுபோல பூடகமாக எழுதியிருந்தார். பிறகு அதை அவர் நீக்கிவிட்டார். முகிலன் காணாமல்போயிருக்கும் சூழலில், சில தினங்களுக்கு முன் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் ராஜேஸ்வரி. அதில், ‘முகிலன் எப்போது வந்தாலும் பஞ்சாயத்து இருக்கு. முகிலன் மீதான தவறை மறைக்க, மற்றவங்களைத் தவறாகச் சித்திரிக்கும் முயற்சியில் ஈடுபடாதீங்க. இதேபோல், ஏற்கெனவே வேறு ஒரு பெண் வைத்த குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்வீங்க? தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டு, ‘என் மகள் போன்றவள்’னு சொல்லித் தப்பித்துக்கொள்ள முகிலன் சொன்ன பொய்தான், பிரச்னையின் உச்சபட்சமே. மகள்னு வாய் கூசாம சில இடங்களில் சொன்னதற்காகப் பலமுறை திட்டியிருக்கேன். மகளுக்கும் மனைவிக்குமான வித்தியாசம் போராளிகளுக்கு இல்லையா?” என்று காட்டமாக நீள்கிறது அந்தப் பதிவு!

பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்?

உதயகுமாரன் சொல்வதென்ன?

கூ
டங்குளம் போராட்டத்தின்போது முகிலனுடன் பழகியவரான சுப.உதயகுமாரன், “அரசை எதிர்த்தால் இதுதான் நிலைமை என்கிற எச்சரிக்கையை அரசு வெளி யிட்டிருப்பதாகவே நினைக்க வைக்கிறது முகிலன் விவகாரம். கூடங்குளம் போராட்டத்தின்போது இரண்டரை வருடங்கள் அவரோடு இருந்திருக்கிறேன். அப்போது எந்தவிதத்திலும் அவர் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடவில்லை. ஒரு ஆடியோ விவகாரம் தொடர்பாக நான்தான் சமரசம் செய்துவைத்தேன் என்று கூறப்படுவதிலும் உண்மை இல்லை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism