Published:Updated:

“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்!”

“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்!”

கொந்தளிக்கும் முகிலன் மனைவி பூங்கொடி!

“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்!”

கொந்தளிக்கும் முகிலன் மனைவி பூங்கொடி!

Published:Updated:
“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்!”

‘பெண்கள் விவகாரத்தால் தலைமறைவானாரா முகிலன்? சுழன்றடிக்கும் சர்ச்சைகள்… விடை தெரியாத கேள்விகள்…’ என்ற தலைப்பில், 31.3.2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக, 31.03.2019 அன்று காலை குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ‘என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, நம்பவைத்துக் கட்டாயப்படுத்தி உடலுறவுகொண்டு என் வாழ்க்கையை முகிலன் கெடுத்துவிட்டார்’ என ஒரு பெண் பரபரப்பான புகாரை அளித்திருக்கிறார்.

இந்தச் சர்ச்சைகள் குறித்து ஏற்கெனவே முகிலனின் மனைவி பூங்கொடியிடம் பேசியபோது பேச மறுத்துவிட்டார். இப்போது ஒரு பெண் புகார் கொடுத்ததும் அவரே நம்மிடம் பேசினார். “முகிலனை இன்னும் காவல் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கு சம்பந்தமாக ஏப்ரல் 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் பதில் சொல்லியாக வேண்டும். எனவே, வழக்கைத் திசைதிருப்புவதற்காக, ‘பெண் ஒருவர் முகிலன்மீது புகார் கொடுத்திருக்கிறார். அதனால், விசாரிக்க இன்னும் இரண்டு, மூன்று வாரங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது’ என்று நீதிமன்றத்தில் நேரம் கேட்பதற்காக இப்படி கிளப்பியிருக்கிறார்கள். முகிலன் காணாமல்போன அன்றைக்கே, சம்பந்தப்பட்ட பெண் இந்தப் புகாரைச் சொல்லியிருக்கலாம். 43 நாள்கள் கழித்துப் புகார் கொடுக்கிறார் என்றால், அவரை யாரோ பின்னணியில் இருந்து இயக்குகிறார்கள் என்று தெரிகிறது. எது நடந்தாலும் எல்லாவற்றையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்!”

முகிலன் சரியான ஆதாரங்களுடன்தான் போராட்டக் களத்துக்குச் செல்வார். அவரின் நேர்மையான செயல்பாடுகளைப் பார்த்து அரசு நடுங்குகிறது. ‘முகிலன் பணம் வாங்கினார்’ என்று குற்றம்சொல்ல ஆதாரம் இல்லாததால், வேறு ஏதாவது அவர்மீது பழி சொல்லி, அவரை முடக்க நினைக்கிறது அரசு. அதற்காகத்தான் இப்படிப் பெண்கள் விஷயத்தில் முகிலனை ஈடுபடுத்தி, பொய்யானக் குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார்கள். இந்தப் புகாரால், என்னையும் உளவியல் ரீதியாகச் சித்திரவதை செய்து, இனி முகிலனைப் போராடுவதற்காக வீட்டைவிட்டு வெளியே நான் அனுப்பிவைக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். பெண் விவகாரத்தால்தான் முகிலன் தலைமறைவாக இருப்பதாகவும் கதை கட்டுகிறார்கள்.

முகிலன் காணாமல்போன பிறகுதான், அந்தப் பெண்பற்றி எனக்குத் தெரியவந்தது. எனக்கும் என் கணவருக்கும் எந்த விஷயத்திலும் ஒளிவுமறைவு இருந்ததில்லை. நாங்கள் சந்தித்துக்கொண்ட காலங்கள் குறைவாக இருக்கலாம். ஆனால், சந்திக்கின்றபோது இடைப்பட்ட காலத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்வோம். அந்தப் பெண்ணைப்பற்றி என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. 25 வருடங்களாக முகிலன் போராட்டக் களத்தில் இருக்கிறார். பல போராட்டங்களில் பல பெண்கள் கலந்துகொண்டார்கள். அப்போது எல்லாம் வராத புகார் இப்போது ஏன் வருகிறது? சம்பந்தப்பட்ட பெண் முகிலனைப் பற்றி அரங்கத்தைக் கூட்டி விவாதிக்கத் தயார் என்று முகநூலில் கூறியிருக்கிறார். முகிலனை அரசு கொண்டுவந்து ஒப்படைத்தால், அழைத்துவந்து பேசுவதற்கு நான் தயார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பெண் பழி சுமத்தி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்!”

எதுவாக இருந்தாலும், நேருக்கு நேர் பேசவேண்டும், செய்ய வேண்டும் என்று நினைப்பவர் முகிலன். ஸ்டெர்லைட் ஆலை, மணல் கொள்ளை, கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் தைரியம் உள்ள ஒருவர், இந்தப் பிரச்னைக்காக எல்லாம் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக மூன்றாவது சி.டி-யை வெளியிடுவேன் என்று சொன்ன முகிலனை, ஸ்டெர்லைட் நிர்வாகமும், அரசும்தான் போலீஸார் உதவியுடன் எங்கேயோ கடத்திப்போய் வைத்திருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில், முகிலன் வெளியே இருந்தால், மக்களிடம் அரசின் தோல்விகளைத் தோலுரித்துக் காட்டுவார். அது ஆளும்கட்சிக்கு நெருக்கடியாக இருக்கும் என்றும் நினைத்திருக்கலாம். நாளைக்கு முகிலன் வெளியேவந்து, யார் தன்னை அடைத்து வைத்திருந்தார்கள் என்று எல்லா உண்மைகளையும் சொன்னால்கூட, அதையும் இவர்கள் பொய் என்று மறுத்துவிடுவார்கள். ஆட்சியிலிருந்த ஒரு முதலமைச்சரின் மரணத்தில் உண்மைகள் வெளிவந்துவிடக் கூடாது என்று  கருதும் அரசாங்கம்தானே இது” என்றார்.

காணாமல் போன முகிலனைப்பற்றி சர்ச்சைகள் மட்டும் வந்துகொண்டிருப்பது புதிராக இருக்கிறது.

- நவீன் இளங்கோவன்
படம்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism