Published:Updated:

அமைச்சர் வேலுமணி பெயரைச் சொல்லி ரூ.6 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி? - கோவை சர்ச்சை

அமைச்சர் வேலுமணி பெயரைச் சொல்லி ரூ.6 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி? - கோவை சர்ச்சை
அமைச்சர் வேலுமணி பெயரைச் சொல்லி ரூ.6 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி? - கோவை சர்ச்சை

அமைச்சர் வேலுமணியின் பெயரைச்சொல்லி 6 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி மனு அளித்தார்.

கோவை குனியமுத்தூர் ஆதி சக்தி நகரைச் சேர்ந்தவர் ராமாத்தாள் (85). இவருக்கு அப்பகுதியில் 3.5 ஏக்கர் விவசாய பூமி உள்ளது. இந்த பூமியை தன் பேரனின் பெயரில் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து ராமாத்தாள் கூறுகையில், ``ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எனது மகன் ரங்கசாமி, எங்களுக்கு ஆதரவாக இருப்பதற்காக சிவக்குமார் என்பவரைத் தோட்டத்து வீட்டில் தங்க வைத்தான். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சிவக்குமார், கடந்த ஜனவரி மாதம் தனது உறவினர்களுடன் வந்து தோட்டத்தில் உழவு முயற்சி செய்தார். இதைத் தட்டி கேட்ட என்னையும், மகன் ரங்கசாமியையும் கீழே தள்ளி விட்டுத் தாக்கினர்.  மேலும் தகாத வார்த்தைகளால் திட்டினர்.

`நீங்கள் செய்வது சரிதானா?' என்று கேட்டதற்கு, `எங்களுக்கு அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது அண்ணன் அன்பரசன் ஆகியோரின் ஆதரவு இருக்கிறது. எங்களை ஒன்றும் செய்ய முடியாது' என்று மிரட்டுகின்றனர். இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், போலீஸ் கமிஷனரிடம், கடந்த 7-ம் தேதி புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை அமைச்சரது பெயரைப் பயன்படுத்தி, ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்யும் நபர் மீது, உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்