Published:Updated:

காரைக்குடியில் சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு

காரைக்குடியில் சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு
காரைக்குடியில் சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு

காரைக்குடி: சி.ஐ.டி.யூ.வின் மாநில மாநாடு நேற்று காரைக்குடியில் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு கட்சியின் தோழர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டுள்ளனர்.

காரைக்குடியில் சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு

சி.ஐ.டி.யூ.வின் 12&வது மாநில மாநாடு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரம்மாண்டமாக நேற்று துவங்கியது. தொழிலாளர்களால் ஜோதியும், கொடி மரமும் எடுத்து வரப்பட்டு, சிவகங்கை நகராட்சி சேர்மன் அர்ச்சுணன், மாநில சி.ஐ.டி.யூ. மாநில செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சவுந்திரராஜன் முன்னிலையில், சி.ஐ.டி.யூ.வின் முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் கொடியை ஏற்றி வைத்தார்.

காரைக்குடியில் சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு

விஜயா மஹாலில் நடந்த அரங்க கூட்டத்தில் அர்ச்சுணன் வரவேற்புரையாற்றினார். பின்னர் மாநில நிர்வாகிகள் தொழிலாளர் நிலை பற்றியும், வேலை வாய்ப்பின்மை பற்றியும், மத்திய-மாநில அரசுகளின் ஏழை-எளிய, தொழிலாளர் விரோத போக்கையும் விளக்கி பேசினார்கள்.

மாலை செக்காலை ரோட்டிலிருந்து தொழிலாளர் பேரணி புறப்பட்டு பாண்டியன் திரையரங்கு முன்புள்ள மைதானத்தில் போடப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை அடைந்தது. பொதுக்கூடத்தில் பேசியவர்கள் அனைவரும் விலைவாசி உயர்வு, தனியார்மயம், மத்திய அரசின் ஊழல், நிர்வாகம் பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார்கள்.

காரைக்குடியில் சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு

இந்த மாநாட்டில் மோட்டார் வாகன சட்டத்தை திருத்தி, மத்திய அரசு கொண்டு வரும் மாற்றத்தை எதிர்த்தும், தமிழக போக்குவரத்து கழகங்களை திறம்பட நடத்துவதற்கு நிதி ஒதுக்க வேண்டும், ஓய்வு பெறுகின்ற தொழிலாளர்களுக்கு அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்து வரும் வருங்கால வைப்பு நிதியை தொழிலாளர் கணக்கில் செலுத்தவும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து முறையாக ஊதியம் வழங்க வேண்டும் போன்ற 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

##~~##
இன்று செயற்குழு நடைபெறுகிறது. அதில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்காக தமிழகம் முழுவதுமிருந்து கலந்து கொண்ட சி.ஐ.டி.யூ. தொழிலாளர்களுக்கு, வீட்டு சுவையுடன் கூடிய செட்டிநாட்டு உணவு வழங்கப்பட்டது.
சாய் தர்மராஜ், செ.சல்மான்