முட்டாள்தனமான, அபத்தமான காரியங்களை திரும்பத்திரும்பச் செய்பவர்களை, ‘கீழ்ப்பாக்கம் கேஸ்’ என்று சர்வசாதாரணமாக ஏளனம் செய்வது தமிழ்நாட்டின் நீண்ட நெடிய ‘முட்டாள்தனமான’ சொல்வழக்கு. இந்தத் தேர்தல் பிரசாரத்தில்கூட, எதிரணியினரை மட்டம் தட்டிப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, ‘இன்னாரை கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கவேண்டும்’ என்று சகஜமாக வார்த்தைகளால் விளாசிக் கொண்டிருக்கின்றனர் மாண்புமிகு அரசியல் வாதிகள். இந்தநிலையில்தான் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் உள்நோயாளிகளை தனியார் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்க தமிழக அரசு கையெழுத்துப் போட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது!

சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த மருத்துவமனையில், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு என இரண்டு தனித்தனி வளாகங்கள் உள்ளன. மொத்தம் 22 வார்டுகள். புறநோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்சைபெறும் வசதியும் உள்ளது. உள்நோயாளிகளுக்கான வளாகம் உயரமான சுற்றுச்சுவருடன் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தினமும் சராசரியாக 500 முதல் 600 பேர்வரை வெளியிலிருந்து வந்து புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைபெற்றுச் செல்கின்றனர். இதே பிரிவில், தற்போது ஆண்களுக்கான வார்டில் 64 பேரும் பெண்களுக் கான வார்டில் 24 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களைத் தவிர, மாதக்கணக்கில், ஆண்டுகள் கணக்கில் உள்நோயாளிகளாகச் சிகிச்சைபெற்றுவருவோரின் எண்ணிக்கை 855. இவர்களில் 506 பேர் ஆண்கள்; 349 பேர் பெண்கள். இது, ஏப்ரல் முதல் வார நிலவரம்.

இப்போது, என்ன பிரச்னை? உள்நோயாளிகள் எனக் கூறப்பட்டாலும், உள்நோயாளிகள் வளாகத்தில் இருப்பவர்கள், அனைவருமே மனநோயுடன் இருப்பவர்கள் அல்ல. சிகிச்சைக்குப் பின் மனநோய் குணமானவர் களும்கூட தங்களது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்து வாழமுடியாமல், மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தமும் தொடர்கிறது. சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீண்டும் இவர்களை தங்கள் வீட்டில் சேர்க்க விரும்பாதது மற்றும் வயதான பெற்றோர் இறந்துபோனதால் இவர்களைப் பராமரிக்கும் அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லாதது என இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே நாற்பது ஆண்டுகளாகக்கூட அரசு மனநலக் காப்பகத்திலேயே தங்கியிருப்பவர்களும் உண்டு.

குணமாகும் நிலையில் உள்ளவர்களுக்கும் குணமானவர்களுக்கும் காப்பகத்துக்குள் தொழில்வழிப் பயிற்சி மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டது. இதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பிரிவுகள் உருவாக்கப் பட்டன. வேலைவாய்ப்புத் துறையின் மூலம் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மருத்துவ மனையின் நிதியை வைத்து, மூலப்பொருட்கள் வாங்கப்பட்டன. காகித உறை, பொம்மை, மெழுகுவத்தி, சாக்பீஸ் என பல பொருட்களும் இங்கு தயாரிக்கப்பட்டன. திருத்தணி, திருப்பதி கோயில்களுக்காக இங்கிருந்து விபூதிப் பொட்டலப் பைகள் தயாரித்து அனுப்பப்பட்டன. இவை தவிர, மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளேயே தோட்டம் அமைக்கப்பட்டு, காய்கறிகளும் விளைவிக்கப்பட்டன. பேக்கரியும் தொடங்கப்பட்டது. பிஸ்கட், பிரட், கேக் வகைகள் தயாரிக்கப்பட்டு, மருத்துவமனை உணவகத்தில் விற்கப்பட்டன. ஸ்டான்லி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவ மனைகளுக்கு இந்த மையத்தின் பிரட் மட்டுமே விநியோகிக்கப்படும் அளவுக்கு, இந்த மையத்தின் திறன் இருந்தது. நெசவு, தச்சு, ஓவியம் தீட்டல், வெல்டிங், கொல்லர், பாய் பின்னுதல் போன்ற வேலைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டன. இந்திய மறுவாழ்வு கவுன்சிலானது, நாட்டிலேயே முக்கியமான மறுவாழ்வு - பயிற்சி மையமாக இதை அங்கீகாரம் அளித்தது.

இந்த மையமானது, குணமடையும் கட்டத்தில் உள்ள நோயாளிகள், தன்னம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு நகரவும், பொருளாதார ரீதியாக சொந்தமாக நிற்கவும், சமூகத்தில் மற்ற நபர்களுடன் ஒன்று கலக்கவும் மிகவும் உதவியாக இருந்தது. ஆனால், இப்போது இந்த தொழில்வழி மறுவாழ்வு மையம், கடந்த காலத்தின் சாட்சி மட்டுமே என்பதுதான் கசப்பான உண்மை. காரணம், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மறுவாழ்வு மையத்தின் பணிகளை ஒரே சீராக எடுத்துச்செல்வதற்குப் பதிலாக, படிப்படியாக செயல்படவிடாமல் செய்ததால், அது தற்போது முடங்கிப்போயுள்ளது.

இந்தநிலையில், நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதாகக் கூறி, தனியார் தொண்டு நிறுவனத் துடன் தமிழக அரசு புரிந்துணர்வு உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இதன்படி, அரசு மனநலக் காப்பகத்தில் நீண்டகாலமாகத் தங்கியுள்ள நோயாளிகளை, வெளியில் கொண்டுபோய் தங்கவைத்து, பராமரிக்கும் பணியைத் தனியார் தொண்டு நிறுவனமே இனி மேற்கொள்ளும். சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில், மொத்தம் 623 உள்நோயாளிகள் நீண்ட காலமாகத் தங்கியிருக்கின்றனர். இவர்கள் படிப்படியாக அரசுக் காப்பகத்திலிருந்து தொண்டு நிறுவனத்தின் பராமரிப்புக்கு மாற்றப்படவுள்ளனர்.

சுகாதாரத் துறையின் செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அந்தப் பதவியிலிருந்து சமீபத்தில் மாற்றப்படுவதற்கு முன்னர், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையின் கூடுதல் செயலாளர் நாகராஜனிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் அறிவிக்கை நடைமுறையில் இருப்பதால், ஒப்பந்தம் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியாது” என்று கூறிவிட்டார். அதே சமயம், ‘‘நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் நோயாளிகளை, தனியார் தொண்டு நிறுவனமே தனது சொந்த நிதியளிப்பில், பராமரிக்க முன்வரும்போது, அதை அரசு ஏற்றுக்கொள்வது சரிதான். இதனால் அரசுக்கு என்ன இழப்பு ஆகிவிடப் போகிறது?” என்கிறார்கள், அதிகாரிகள் தரப்பில்!

அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட ‘பேன்யன்’ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கிஷோர்குமாரிடம் பேசினோம். வேறு சிலரைத் தொடர்புகொள்ளுமாறு அவர்களின் தொடர்பு எண்களைக் கொடுத்தார். பேன்யன் சார்பில் நம்மிடம் பேசிய லட்சுமி நரசிம்மனும், ஒப்பந்தத்தின் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். இருதரப்புமே ஒப்பந்தம் குறித்து ரகசியம் காப்பதைப் பார்த்தால், ஆதரவற்று வாடும் நீண்டகாலக் காப்பகவாசிகளைப் பராமரிப்பதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார்கள், சமூகப் பணியாளர்கள்.

‘‘மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, அவர்களைப் பராமரிப்பது என்னும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அரசாங்கமேதான், அதை நிறைவேற்றவேண்டும். தாராளமயம், தனியார்மயம் கொள்கையை இதிலும் செயல்படுத்தி, மனநோயாளிகளைக் காக்கும் கடமையிலிருந்து விலகி, அவர்களைக் கைவிடுவது மோசமான மனிதவுரிமை மீறலாகும்” என்கிறார், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச்செயலாளர் நம்புராஜன்.

தேசிய மனிதவுரிமை ஆணையத்தின் உத்தரவுப்படி, 2008-ல் அரசு மனநலக் காப்பகத்தில் ஆய்வுசெய்த டாக்டர் லட்சுமிதர் மிஸ்ரா (ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி) தலைமையிலான குழு, தனியார் அமைக்கும் இத்தகைய ‘வீட்டைப்போல’ (halfway home) மையத்தை, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே அமைக்க வேண்டும் என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘‘அரசு மனநலக் காப்பகத்தின் இன்னொரு பிரிவாகவே, ‘வீட்டைப்போல’ (halfway home) மையம் இருக்கவேண்டும்; அப்படி அமைக்கப்பட்டால்தான், மனநல மருத்துவர்கள், சிகிச்சை உளவியலாளர்களின் உடனடி கவனிப்பு அவர்களுக்குக் கிடைக்கும்” என்று டாக்டர் லட்சுமிதர் மிஸ்ரா குழு கூறியிருந்தது. அந்தக் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகள் இதுவரை அரசுத் தரப்பில் செயல்படுத்தப்படவில்லை என்பது குறையாக இருந்துவந்தது; இப்போது, மருத்துவத் துறையில் அரசின் பொறுப்பைத் துறந்து, தனியாரிடமே ஒப்படைத்துவிடுவது எனும் அடுத்தகட்டத்துக்கு போயிருக்கிறது.

அரசுக் காப்பகத்தில் இருக்கும் மனநோயாளிகளின் கதி என்னவாகும் என்ற பரிதவிப்பான கேள்விக்கு அரசுதான் பதில்கூற வேண்டும். அது அரசின் கட்டாய கடமையும்கூட!

- இரா.தமிழ்க்கனல்

படங்கள் : பா.காளிமுத்து