
சென்னை: சென்னை, மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிகட்ட போரில் இறந்தவர்களுக்கு 4ஆம் ஆண்டு நினைவேந்ததல் நிகழ்ச்சி மாணவர்களால் கடைபிடிக்கப்பட்டது.
தமிழகத்தில் தன்னெழுச்சியாக எழுந்த மாணவர்கள் போராட்டம் ஓய்ந்துபோய் விட்டதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். அது நீருபூத்த நெருப்பாக கணன்று கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணமாய் கடந்த 18ஆம் தேதி அவர்கள் கடைபிடித்த 4ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நிணைவேந்தல் நிகழ்ச்சியை சொல்லலாம். மிகுந்த எழுச்சியோடும் உணர்ச்சி பெருக்கோடும் நடந்து முடிந்தது அந்த நிகழ்ச்சி.
ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் நடத்திய அந்த நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலையின் அருகில் நடந்தது. அதில் லயோலா கல்லூரி மாணவர்களின் வழிகாட்டலோடு ஐம்பதுக்கும் மேற்பட்ட மானவர்கள் கலந்து கொண்டார்கள். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மென்மையாக அஞ்சலி செலுத்தியவர்களின் பேச்சோ அணல் தெறிப்பதாக இருந்தது.
##~~## |