Published:Updated:

கைவிரித்த போக்குவரத்துக் கழகம; அவதியில் ஓய்வூதியர்கள்

கைவிரித்த போக்குவரத்துக் கழகம; அவதியில் ஓய்வூதியர்கள்
கைவிரித்த போக்குவரத்துக் கழகம; அவதியில் ஓய்வூதியர்கள்
கைவிரித்த போக்குவரத்துக் கழகம; அவதியில் ஓய்வூதியர்கள்

மதுரை: போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை, ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது தொழிலாளர்கள் மத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியில் இருந்து ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை, ஓய்வூதியம் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் (மதுரை) தலைவர் வி.கே.குருசாமி, செயலாளர் ஆர்.தேவராஜ் ஆகியோர் நம்மிடம் பேசியபோது, அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை நிர்வாகம் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனடியாக வழங்காமல் தொடர்ந்து கால தாமதம் செய்து வருகிறது.

பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததும் நிதி நிலைமை சீராகிவிடும், உங்களுக்குப் பணம் கிடைக்கும் என்றார்கள். நாங்களும் நம்பினோம் ஆனால் பழைய நிலையே தொடர்கிறது. மின்வாரியம் போன்றவற்றில் ஓய்வுபெ-றும் நாளிலேயே பணிக்கொடை உள்ளிட்ட பண பலன்கள் வழங்கப்பட்டு விடுகின்றன. ஆனால், போக்குவரத்துக் கழகத்தில் 30, 35 ஆண்டுகள் வேலைபார்த்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, கடந்த 2011 முதல் இதுவரையில் பணிக்கொடை வழங்கப்படவில்லை.

கைவிரித்த போக்குவரத்துக் கழகம; அவதியில் ஓய்வூதியர்கள்

இதுதொடர்பாக எங்கள் அமைப்பின் சார்பில் வழக்குத் தொடர்ந்தோம். காலதாமத காலத்திற்கு 10 சதவிகித வட்டியுடன் பணிக்கொடையை வழங்க கோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பையும் நிர்வாகம் அமல்படுத்தவில்லை.    இதேபோல ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை 2011ஆம் ஆண்டு ஜூலை முதலும், விடுமுறை சம்பளம் 2010ஆம் ஆண்டு நவம்பரில் இருந்தும் வழங்கப்படவில்லை. இதை எல்லாம் விடக் கொடுமை, பலருக்கு ஓய்வூதியமே நிறுத்தப்பட்டு விட்டது.

எனவே அரசு, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, விடுமுறைச் சம்பளம், அகவிலைப்படி நிலுவை போன்ற பணப்பலன்களையும் உடனடியாக ஓய்வூதியர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

##~~##
‘ஓய்வூதியம் ஒன்றும் பிச்சையல்ல. அது கொடுக்கப்பட வேண்டிய ஊதியம். அதை கேட்பது ஓய்வு பெற்றோரின் உரிமை. வழங்க வேண்டியது அரசின் கடமை‘ என்று வழக்கொன்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. அதனால் ஓய்வூதியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என்றார்.
கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து