Published:Updated:

தேனியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

தேனியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
தேனியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

தேனி: தனியார் சொகுசு பேருந்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டதை வன அலுவலர் பறிமுதல் செய்துள்ளார்.

தேனியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னையில் இருந்து கம்பத்துக்கு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேரூந்து ஒன்றில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டுள்ளது. இதை யாரோ ஒரு மர்ம நபர் தேனி வன அலுவலருக்கு தெரிவித்துள்ளார்.

தேனியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
##~~##
அந்த தகவல் கிடைத்ததும் மாவட்ட வன அலுவலர் தனியே சென்று மர்ம நபர் கொடுத்த தகவலின்படி தேனி அருகே அந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்டார். அப்போது அதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சந்தனக்கட்டைகளை பறிமுதல் செய்து பேருந்து ஓட்டுனரை, வன அலுவலர் தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்று, யார் கடத்தி வந்தது, எங்கே கடத்தி செல்கின்றனர் என  மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

சக்தி அருணகிரி