Published:Updated:

கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவங்கியது...

கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவங்கியது...
கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவங்கியது...

திண்டுக்கல்: கொடைக்கானலில் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை பார்வையிட சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவங்கியது...

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வருடந்தோறும் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு 52வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. அதோடு, 150வது ஏரி ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. மலர் கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் தாமோதரன் துவக்கி வைத்தார்.

கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவங்கியது...

அரசின் பல்வேறு துறையை சார்ந்த ஸ்டால்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பத்து லட்ச ரூபாய் செயவில் மலர்களால் அமைக்கப்பட்டிருந்த ‘ஆங்ரி பேர்ட்’ உருவ பொம்மை, வாழை தண்டுகளால் அமைக்கப்பட்டிருந்த தாஜ்மஹால் ஆகியவை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்தன.

கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவங்கியது...

மலர் கண்காட்சியைத் தொடர்ந்து பிரையண்ட் பூங்காவில் நடந்த கோடை விழா துவக்க நிகழ்ச்சியை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், மின்சாரத்துறை அமைச்சர் ‘நத்தம்' விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானலில் மலர் கண்காட்சி துவங்கியது...

கேடை விழா துவங்கியதைத் தொடர்ந்து கொடைக்கானல் நகர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுள்ளது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு கோடைவிழா நடைபெறும்.

ஆர்.குமரேசன்,

படங்கள்: வீ.சிவக்குமார்