Published:Updated:

`பெயரில் கூட பாகிஸ்தான் தொடர்பு இருக்கக் கூடாது!’ - பெங்களூரு `கராச்சி’ பேக்கரி முன் போராட்டம்

`பெயரில் கூட பாகிஸ்தான் தொடர்பு இருக்கக் கூடாது!’ - பெங்களூரு `கராச்சி’ பேக்கரி முன் போராட்டம்
`பெயரில் கூட பாகிஸ்தான் தொடர்பு இருக்கக் கூடாது!’ - பெங்களூரு `கராச்சி’ பேக்கரி முன் போராட்டம்

காஷ்மீரில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலினால் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்த பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கும் எதிராகப் போராட்டங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெயிஷ் இ முகமது என்ற அமைப்புதான் தாக்குதலுக்கு காரணம் என்று உறுதியான பிறகு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது.

தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த மிகவும் ஆதரவான நாடு என்ற அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 200% வரி விதிக்கப்பட்டது. இன்னும் இதுபோன்ற பல வழிகளில் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது இந்திய அரசு. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்களும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று பெங்களூரு, இந்திரா நகரில் உள்ள பிரபலமான கராச்சி பேக்கரி முன்பு கூடிய சிலர் கடையின் பெயரை அகற்றும்படி கோஷமிட்டுள்ளனர். கராச்சி என்பது பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரின் பெயர். அந்தப் பெயருடன் இந்தியாவின் கடை உள்ளதால் அதை மாற்றும்படி போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தைக் கண்டு பயந்த கடையின் உரிமையாளர் தங்களது பெயர் பலகையில் உள்ள கராச்சி என்ற பெயரை மட்டும் மறைத்துள்ளார். பின்னர் அந்தக் கடையின் முன்புறம் அனைவருக்கும் தெரியும்படி இந்திய தேசியக் கொடியை வைத்துள்ளார். 

1947-ம் வருடம் கன்சந்த் ராம்னமி என்பவர் அகதியாக பெங்களூருக்கு வந்து 1952-ம் ஆண்டு தொடங்கியதுதான் இந்த கராச்சி பேக்கரி. அந்தப் பகுதியில் இது மிகவும் பிரபலமான கடை. தற்போது பெங்களூரு முழுவதிலும் இதற்குக் கிளைக் கடைகளும் உள்ளன. சுமார் 53 வருடங்களாக அந்தக் கடை செயல்பட்டு வருகிறது. இநக்ச் சம்பவத்துக்குப் பிறகு பெங்களூரில் பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்கள் முழுவதும் இந்தக் கடையின் புகைப்படங்கள் மட்டுமே நிரம்பி வழிகின்றன.