Published:Updated:

`எம்.பி வரவில்லை; மனைவி வரவேற்றார்' - தேஜஸ் ரயில் சர்ச்சையில் திண்டுக்கல் எம்.பி!

`எம்.பி வரவில்லை; மனைவி வரவேற்றார்' - தேஜஸ் ரயில் சர்ச்சையில் திண்டுக்கல் எம்.பி!
`எம்.பி வரவில்லை; மனைவி வரவேற்றார்' - தேஜஸ் ரயில் சர்ச்சையில் திண்டுக்கல் எம்.பி!

மதுரை - சென்னை இடையில் தேஜஸ் ரயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. நேற்று மதியம் கன்னியாகுமரியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சென்னையிலிருந்து மதுரைக்கு அதி விரைவாக ஆறரை மணி நேரத்தில் சென்று சேரும் வகையில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து புறப்படும் தேஜஸ் ரயில் திருச்சியில் மட்டுமே நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட எம்.பி உதயகுமார் முயற்சி செய்து திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்திலும் நின்று செல்ல அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. 

நேற்று கன்னியாகுமரியில் நடந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக உதயகுமார் எம்.பி சென்றுவிட்டார். இந்த நிலையில், மதுரையிலிருந்து வந்த தேஜஸ் ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்றது. தேஜஸ் ரயிலை வரவேற்றுக் கொடியசைத்து துவக்கி வைத்தார் எம்.பி உதயகுமாரின் மனைவி விமலா ராணி.

நேற்று மாலை 4 மணியளவில் கொடைரோடு ரயில் நிலையம் வந்தடைந்த ரயிலைப் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். நிகழ்ச்சியில் ரயில் நிலைய அதிகாரிகள் ராமு, பொன் மாரியப்பன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ரயில் நிலையத்திலிருந்து முதல் பயணியாக வசந்தி ஜெயசங்கர் என்பவர் சென்னைக்குச் சென்றார். கொடைரோடு ரயில் நிலையத்தைவிட அதிக மக்கள் வந்து செல்லும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் நின்று சென்றால் இன்னும் வசதியாக இருக்கும் எனத் திண்டுக்கல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.