Published:Updated:

சென்னையில் கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் வீடுகளில் சோதனை; சீல்!

சென்னையில் கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் வீடுகளில் சோதனை; சீல்!
சென்னையில் கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் வீடுகளில் சோதனை; சீல்!
சென்னையில் கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் வீடுகளில் சோதனை; சீல்!

சென்னை: சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களிகளின் வீடுகளில் அதிரடி சோதனையை மேற்கொண்ட போலீசார், சோதனை நடத்திய இடங்களில் சீல் வைத்துள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, சென்னையிலும், கிரிக்கெட் சூதாட்டம் மூலம் 20-க்கும் மேற்பட்ட தரகர்கள் கோடிகளை குவித்துள்ளனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஹரிஸ் பஜாஜ், நர்பத், வேதாச்சலம், பப்பு கவுதம், தீபஜ் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 தரகர்கள் பிடிப்பட்டனர்.

##~~##
இவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் ரொக்கப்பணம், லேப்டாப், கம்ப்யூட்டர்கள், வயர்லென்ஸ் போன்கள், செல்போன்கள் ஆகிய வையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூதாட்ட கும்பலுக்கு அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் தலைவராக செயல்பட்டது தெரியவந்தது.
 
போலீசார் தேடியதையடுத்து தலைமறைவாக இருந்த அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிரசாந்த் நேற்று மாலையில் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் திடீரென சரண் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து பத்திரிகை மற்றும் டி.வி. கேமரா மேன்கள் பிரசாந்தை படம் பிடிப்பதற்காக அங்கு படையெடுத்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதற்கு அனுமதிக்கவில்லை. இதன்பிறகு பிரசாந்திடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது பிரசாந்த், "கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதனை ஒரு தொழில் போலவே நான் செய்து வருகிறேன். பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் மூலம் தினந்தோறும் லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்தேன். குறைந்தது ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கும்.
இப்படி கோடிக்கணக்கான ரூபாயை சூதாட்டம் மூலமாக நான் சுருட்டியுள்ளேன். என்னைப் போல பலர் சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இதில் பங்கேற்றுள்ளனர். இதுவே சூதாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவியது" என்று கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், அயனாவரத்தில் உள்ள பிரசாந்தின் பங்களா வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அதிரடி சோதனை நடத்தி பாஸ்போர்ட் மற்றும் லேப்-டாப்புகளை கைப்பற்றியுள்ளனர். மேலும் சோதனை நடத்தப்பட்ட அறைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சீல் வைத்துள்ளனர்.

வேப்பேரியில் உள்ள உத்தம் ஜெயின் என்பவரது வீட்டில் இன்று சோதனை நடத்திய போலீசார், சுமார் 3 லட்சம் ரொக்கம், 12 சிம்கார்டுகள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  உத்தம் ஜெயின் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கீழ்ப்பாக்கம் சஞ்சய் பாப்னா வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப், சூதாட்டம் தொடர்பான சில ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள 6 தரகர்களில் ஹரிஸ் பஜாஜ், பப்பு, வேதாச்சலம், நர்பத் ஆகிய 4 பேரை 10 நாட்கள் காவலில் எடுக்க போலீஸ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.