Published:Updated:

தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்

தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்

சென்னை: தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அப்பதவியிலிருந்து வந்த ராஜகோபால், மின் நிதி நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ், இதுவரை நிரஞ்சன் மார்டி வகித்துவந்த நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்களுக்கான துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்நடைத்துறை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் செயலர் கங்காதீப் சிங் பேடி ஐஏஸ், ராஜீவ் ரஞ்சன் வகித்த வருவாய் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் ஆணையர் டாக்டர் எஸ். விஜயகுமார் ஐஏஎஸ், கால்நடைத்துறை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

##~~##
மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் டாக்டர் கிரிஜா வைத்தியநாதன் ஐஏஎஸ்,  டாக்டர் டி.எஸ். ஶ்ரீதர் ஐஏஎஸ் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நில நிர்வாக துறையின் செயலர்/ ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.