Published:Updated:

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபரால் பரபரப்பு!

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபரால் பரபரப்பு!
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபரால் பரபரப்பு!

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் சினிமை ஃபைனான்சியர் ஒருவர் பல மணி நேரம் துப்பாக்கியை காட்டி, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபரால் பரபரப்பு!

கீழ்பாக்கத்தில் உள்ள மல்லிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விஜயகர் என்ற சினிமா ஃபைனான்சியர் இன்று காலை 7 மணியிலிருந்து, தான் வசிக்கும் மாடி வீட்டின் ஜன்னல் வழியாக தன்னுடைய 2 கைத்துப்பாக்கியை காட்டி, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மிரட்டி வந்தார்.

மேலும் 2 முறை அவர் துப்பாக்கியால் சுட்டதால், அங்கு வசிப்பவர்கள் பீதியடைந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபரால் பரபரப்பு!

இதனையடுத்து அதிடிப்படையினருடன் அங்கு விரைந்து வந்தனர் போலீசார். இருப்பினும் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு, ஜன்னல் வழியாக விஜயகர் துப்பாக்கியை காட்டியும், தனது தலையில் வைத்தும் மிரட்டி வருவதால், அதிரடியாக உள்ளே நுழைய தயங்கி வருகின்றனர்.

இதனிடையே விஜயகர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும்,  அவரை வீட்டை காலி செய்யும்படி அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கூறி, நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு பெற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.