Published:Updated:

பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சோதனை: சிபிசிஐடி மறுப்பு

பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சோதனை: சிபிசிஐடி மறுப்பு
பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சோதனை: சிபிசிஐடி மறுப்பு
பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சோதனை: சிபிசிஐடி மறுப்பு

சென்னை: "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை" என்று சிபிசிஐடி மறுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மருமகனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான குருநாத் மெய்யப்பன் ஆகியோரிடம் கிரிக்கெட் சூதாட்ட தரகர் விண்டூ தாரா சிங் அடிக்கடி பேசியதாக காவல்துறை தெரிவித்தது.

##~~##
இதையடுத்து, சென்னை போர்ட் கிளப்பில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் இன்று சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.
ஆனால், இதனை சிபிசிஐடி ஐஜி மஞ்சுநாதா மறுத்துள்ளார். ஆனாலும், ஸ்ரீனிவாசன் வீட்டில் சோதனை நடத்தப்படலாம் என்று சிபிசிஐடி வட்டாரம் தெரிவிக்கிறது.