பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்

Vinayaga Murugan

ஆஹான்ராமாபுரம் பகுதிவாசிகளிடம் விசாரித்தால் இரண்டு நாளைக்கு ஒருமுறைதான் தண்ணீர் லாரி வருகிறது என்கிறார்கள். ஒரு வீட்டுக்கு இரண்டு அல்லது மூன்று குடங்கள் தண்ணீர்தான் விநியோகிப்பதாகச் சொல்கிறார்கள். ராமாபுரம் பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள். கூலி வேலை செய்பவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் உட்பட நான்கைந்து பேர் என்று வைத்துக்கொண்டாலும் ஒருவருக்கு ஒரு நாளைக்குக் கால் குடத்துக்குக் குறைவான நீர்தான் கிடைக்கும். இந்தக் கொளுத்தும் வெயிலில் ‘டீஹைட்ரேட்’ ஆகாமல் இருக்க ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒன்றரை லிட்டர் நீராவது குடிக்கவேண்டும். இவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்? வேறென்ன... கள்ளச்சந்தைதான். ஒரு குடம் குடிநீர், ஒன்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதுவும் லாரி டிரைவர்களைத் தெரிந்திருக்க வேண்டும். பதினைந்து இருபது ரூபாய் கொடுத்துக்கூட வாங்க மக்கள் தயாராக உள்ளார்கள். ஏரி, குட்டைகளில் பிடித்துவரும் குடிநீர் அல்லாத தண்ணீர் 6,000 லிட்டர் கள்ளச்சந்தையில் 2,500 ரூபாய்க்கும் குடிநீரை 1,000 லிட்டர், 600 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் நீரின் விலையை ஏற்றிவிட்டன. அதனால், லாரிகள் முதலில் அங்குதான் செல்கின்றன. போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் இரு வாரங்களில் சென்னையில் தண்ணீருக்காகக் கலவரம் நடக்கவும் வாய்ப்புள்ளது.

ஆஹான்
ஆஹான்

mohanramko

சென்னையில் காற்றுத் தட்டுப்பாடும் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து, தண்ணீர் குழாய் மூலமாகக் காற்றை அனுப்பிக்கொண்டு வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Annaiinpillai


ஐ.டி கம்பெனியில் பிரமோஷன் பெற, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை முதல் தகுதியாக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

barfipayyan


இந்தியர்கள் குடும்ப கௌரவத்தைப் பெண்ணின் மடியிலும் தேச பக்தியை கிரிக்கெட்டிலும் வைத்துள்ளனர்.

ஆஹான்

mohanramko

சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு என்பது வதந்தி - அமைச்சர் வேலுமணி

அப்ப சென்னைத் தெருக்களில் காலி குடங்களை வெச்சி விளையாடிக்கிட்டு இருக்காங்க, அப்படித்தானே மினிஸ்டர்?

pachaiperumal23

‘ரூ.70 லட்சத்துக்குச் சாப்பிட்டார்’ இஸ்ரேல் பிரதமர் மனைவி - செய்தி.

# நாங்கள்லாம் இட்லியவே கோடி ரூபாய்க்குத் தின்னவங்க. போவிகளா அங்குட்டு! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு