Published:Updated:

மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து!

மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து!
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து!
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து!

புதுடெல்லி: மலையாள மொழிக்கு செம்மொழி அந்துஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், வருமான வரித்துறையை சீரமைக்க கூடுதலாக 20 ஆயிரத்து 751 பணியிடங்களை உருவாக்கும் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது என்றார்.

மேலும், மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது என்றும் சிதம்பரம் கூறினார்.

மலையாளத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரையில் வெளியிட உள்ளது.

##~~##
செம்மொழி அந்தஸ்து பெற்றதன் மூலம் மலையாள மொழி திறனாய்வு மையம் அமைக்கப்படுவதோடு, பல்கலைக்கழகங்களில் மலையாள மொழிக்கான இருக்கைகளும் ஏற்படுத்தப்படும்.
ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.