Published:Updated:

``பொள்ளாச்சிக்காக பொங்கி வீடியோ போட்டா, வர்ற கமென்ட்ஸ்...?’’ - அறந்தாங்கி நிஷா

``பொள்ளாச்சிக்காக பொங்கி வீடியோ போட்டா, வர்ற கமென்ட்ஸ்...?’’ - அறந்தாங்கி நிஷா

``பொள்ளாச்சிக்காக பொங்கி வீடியோ போட்டா, வர்ற கமென்ட்ஸ்...?’’ - அறந்தாங்கி நிஷா

``பொள்ளாச்சிக்காக பொங்கி வீடியோ போட்டா, வர்ற கமென்ட்ஸ்...?’’ - அறந்தாங்கி நிஷா

``பொள்ளாச்சிக்காக பொங்கி வீடியோ போட்டா, வர்ற கமென்ட்ஸ்...?’’ - அறந்தாங்கி நிஷா

Published:Updated:
``பொள்ளாச்சிக்காக பொங்கி வீடியோ போட்டா, வர்ற கமென்ட்ஸ்...?’’ - அறந்தாங்கி நிஷா

பொள்ளாச்சி கொடூர சம்பவத்திலிருந்து இன்றளவும் நாம் யாரும் மீண்டு வரவில்லை. இந்தச் சம்பவம் குறித்து, அறந்தாங்கி நிஷா தன்னுடைய கருத்தை வீடியோவாகப் பதிவிட்டிருந்தார். அது குறித்து கூடுதல் தகவல் தெரிந்துகொள்வதற்காக நிஷாவிடம் பேசினோம்.

``சட்டம் கடுமையாக இல்லாததுனாலதான் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் வெளியில் வர்றது இல்ல. நிர்மலா தேவிக்கு எப்படி ஜாமீன் கொடுக்கலாம், அப்போ நிர்மலா தேவியால் பாதிக்கப்பட்ட  பொண்ணுங்களுடைய பாதுகாப்புக்கு யார் பொறுப்பு. இன்னைக்கு வரைக்கும் நிர்மலா தேவிக்கு ஏன் ஜாமீன் கொடுத்தாங்கன்னு எனக்குத் தெரியலை. எல்லோரும் கொந்தளிக்கும்போது அந்தம்மாவை கொண்டு போய் ஜெயிலில் வைச்சாங்க. இப்போ அவங்களை மறந்துட்டாங்கன்னு ஜாமீன் கொடுத்துட்டாங்க! மறக்கிற காரியத்தையா அந்தம்மா பண்ணியிருக்கு! பார் நாகராஜனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருக்குன்னு சொல்றாங்க. ஆனா, அவர் வெளிய தான் இருக்கார். சாட்சியை அழிக்கிறதுக்கு ஒரு ஆள் வெளியில் இருக்கணும்னு நினைக்கிறாங்களா! சட்டம் இவ்வளவு தூரம் மோசமா இருக்கிறதுனால யார்னாலும் எந்தத் தவறுனாலும் செய்யலாம்னு நினைக்கிறாங்க. 

பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் ஓரளவுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது ஊடகம் மட்டும்தான். அவங்களுடைய அடையாளத்தை வெளியிடாமல் கண்ணியமா ஊடகங்கள் நடந்துக்குறாங்க. அவங்க வெளியிடாமல் ரகசியமாக வைச்சிருந்த அடையாளத்தை ஓப்பனா வெளியிட்டது நம்மளுடைய அரசாங்கம்தான். பகிரங்கமா அதைக் கண்டிக்கணும். எல்லோரும் டிஆர்பிக்காக ஊடகங்கள்தான் வெளியிடுவாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா, அவங்க மறைச்சாங்க. யார் மறைக்கணுமோ அவங்க வெளிப்படையா சொன்னாங்க. அப்போ நாம பாதிக்கப்பட்டாலும் நம்மளுடைய அடையாளத்தை வெளியில் சொல்லிடுவாங்கன்னு பெண்கள் யோசிப்பாங்கதானே! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சட்டமும் கடுமையானது கிடையாது, பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பும் கிடையாதுன்னா... எந்தப் பெண்கள் வெளியில் வருவாங்க? பெண்களுக்கு இந்த நாட்டுல சுத்தமா பாதுகாப்பு இல்லைங்குறது ரொம்பவே வருத்தமா இருக்கு. எனக்குத் தெரிஞ்சு பத்து நாள் இந்தப் பொள்ளாச்சி விஷயத்தைப் பற்றி எல்லோரும் பேசுவாங்க, பதினொன்றாவது நாள் எல்லோரும் மறந்துடுவாங்க. பரபரப்பா பேசப்பட்ட சிறுமி ஹாசினி வழக்கில் இன்னமும் தஷ்வந்த்துக்கு தூக்குத் தண்டனை ஏன் நிறைவேற்றப்படல! இதுவரைக்கும் பாலியல் ரீதியா பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்மளுடைய சட்டம் என்ன தண்டனை கொடுத்திருக்கு? எல்லோரும் சுதந்திரமாகத்தானே இருக்காங்க. கடுமையான தண்டனை கொடுத்திருந்தா அந்தத் தவற்றைச் செய்யணும்னு நினைக்கிறவன் கொஞ்சமாச்சும் பயப்படுவான். கொஞ்ச நாள் நம்மளை அடைச்சு வைப்பாங்க நாம ஈஸியா ஜாமீன்ல வந்துடலாம் என்கிற எண்ணம்தானே எல்லாத்துக்கும் காரணம்! அவங்களுக்கு உடனடியா தண்டனை கொடுங்க. இனிமே எவன் இந்தத் தப்பை பண்ணாலும் இதுதான் தண்டனைன்னு சொன்னா, இந்த மாதிரியான குற்றங்கள் குறையும். உண்மையாகவே சட்டம் சரியா இருக்கு அப்படின்னா, அந்த நான்கு பேர் கூடத் தொடர்பு இருக்குறவங்க யாருன்னு இந்நேரத்துக்குக் கண்டுபிடிச்சிருக்கணும். 

பொண்ணுங்களுக்குப் பாதுகாப்பு பொண்ணுங்கதான். கோயம்புத்தூரில் இரண்டு பிள்ளைங்க துப்பாக்கி வைச்சிக்க அனுமதி கேட்குறாங்க.. அப்போ இந்தத் தலைமுறை பிள்ளைங்ககிட்ட எந்த மாதிரியான எண்ணங்களை நீங்க உருவாக்குறீங்கன்னு யோசிச்சு பாருங்க. எவனோ ஒருத்தன் அடிக்கிறான்னு கதறி துடிக்குது அந்தப் பொண்ணு! அந்தக் குரல் யாருன்னு நமக்குத் தெரியாது. ஆனா, பெத்த தாயா அந்தக் குரலைக் கேட்கும்போது அந்தப் பொண்ணோட அம்மாவின் மனசு எப்படித் துடிதுடிச்சுப் போயிருக்கும். இவற்றையெல்லாம் யோசிக்காம தண்டனையே இன்னும் அறிவிக்காமல் வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறதைக் கொஞ்சமும் ஏத்துக்க முடியாது. இன்னைக்கு அந்தப் பொண்ணோட வாழ்க்கையே போயிடுச்சு. இதுக்கு யார் பொறுப்பு ஏத்துக்க போறீங்க... இப்போ தேர்தல் சமயம் வேற. இன்னும் ஐந்தே நாளில் தேர்தல் பிரசாரம், தேர்தல் செய்திகள்னு மீடியாவிலிருந்து எல்லோரும் பேச ஆரம்பிச்சிடுவோம். அப்போ இந்தப் பொண்ணுங்களுடைய நிலைமை என்னவாகும்?

இவையெல்லாத்துக்கும் சட்டம் உடனடியாகக் கடுமையாக்கப்படணுங்குறது மட்டும்தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். அவங்க கையில் ஆதாரம் இருக்கு. அதை வைச்சு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது பண்ணி ரகசியமாக நீதிபதியைச் சந்திச்சு அவங்களுக்கு தூக்குத் தண்டனை கொடுத்திருந்தாங்கன்னா இனிமே இதை மாதிரி பண்ணணும்னு நினைக்கிறவன் யோசிப்பான். ஆனா, நம்மளுடைய அரசு அந்த மாதிரி எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது. ஜாமீன்ல யாரையுமே வெளியிடக் கூடாது.

நான் வீடியோ போட்டதுக்கே என்னுடைய கமெண்டில் ஒருத்தன், நீங்க முதல்ல விஜய் டிவியில் ஆபாசமா பேசுறதைக் குறைங்கன்னு சொல்றான். நான் வெளியில் ஒரு விஷயம் சொன்னாகூட நம்ம பண்ற தொழிலுக்குள்ள போய் நம்மளை அசிங்கப்படுத்துறாங்க. அப்போ ஆண்களுடைய மனநிலை எப்படியிருக்கு? நாம பேசுற விஷயம் என்னன்னு பார்க்காமல் நம்மகிட்ட என்ன குறை சொல்லலாம்னு தேடுறாங்க. பெண்கள் சாதிக்கக் கூடாது, பெண்கள் வாழவே கூடாதுன்னு நினைக்கிறீங்களா..? 

எல்லா இடங்களிலும் கல்லூரி மாணவர்கள் இந்தப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்குறாங்க. அவங்களையும் அடிச்சுத் துறத்துறாங்க. எங்களுக்குப் போராடவும் உரிமையில்ல, வாழவும் உரிமையில்லைன்னா எதுக்கு இந்தச் சட்டம், அரசியல்வாதிகள் எல்லோரும்? 

உண்மையாகவே ரொம்ப மன வருத்தமா இருக்கு. உடனடியா இந்தப் பிரச்னைக்குத் தமிழக அரசு ஒரு தீர்வை சொல்லியே ஆகணும்?`` என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism