Published:Updated:

2ஜி குற்றப்பத்திரிகை: சிபிஐக்கு 2 நாள் அவகாசம்

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி, மார்ச் 29,2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் இன்று சிபிஐக்கு 2 நாள் கால அவகாசம் அளித்தது. ##~~##

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மார்ச் 31-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜரான சிபிஐ தரப்பு, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டது.

மேலும், 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஏப்ரல் 2 ஆம் தேதி தாக்கல் செய்வதாகவும் உறுதி அளித்தது.

இதைத் தொடர்ந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு மேலும் 2 நாள் அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்.

முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தங்களது விசாரணை அறிக்கைகளை சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் சீலிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் அளித்தன.

இந்த வழக்கில் அந்நிய நிதி மேலாண்மை சட்ட விதிகள் பெருமளவு மீறப்பட்டுள்ளதாகவும், பினாமி பரிவர்த்தனைகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.