Published:Updated:

ஈரோடு: ரூ.4 கோடி மோசடியில் சிக்கிய டிவிஎஸ் ஈமுகோழி பங்குதாரர்கள் 4 பேர் கைது

ஈரோடு: ரூ.4 கோடி மோசடியில் சிக்கிய டிவிஎஸ் ஈமுகோழி பங்குதாரர்கள் 4 பேர் கைது
ஈரோடு: ரூ.4 கோடி மோசடியில் சிக்கிய டிவிஎஸ் ஈமுகோழி பங்குதாரர்கள் 4 பேர் கைது
ஈரோடு: ரூ.4 கோடி மோசடியில் சிக்கிய டிவிஎஸ் ஈமுகோழி பங்குதாரர்கள் 4 பேர் கைது

சென்னை: ஈரோட்டில் முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்த டிவிஎஸ் ஈமு கோழி பண்ணை பங்குதாரர்கள் 4 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ளது டிவிஎஸ் ஈமுகோழி பண்ணை நிறுவனம். இந்த நிறுவனம் முதலீட்டாளர்களை  கவர்வதற்காக எங்கள் நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு முதலீடு செய்தால் மாதம் 12 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும்,  வருடாந்திர போனசும் வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தது.

இதனை நம்பிய பொதுமக்கள் 300 பேர் அந்த நிறுவனத்தில் சுமார் 4 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். ஆனால், ஈமு நிறுவனம் சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு ஊக்கத் தொகையோ,  வருடாந்திர போனசோ கொடுக்காமல் ஏமாற்றியதோடு, நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவானார்கள்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த 2012ஆம் ஆண்டு புகார் அளித்தனர். இதையடுத்து, கடந்த வாரம் டிவிஎஸ் ஈமுகோழி நிறுவன உரிமையாளர் பாலாஜி, ராஜா, அரவிந்த் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

##~~##
இந்த நிலையில், டிவிஎஸ் ஈமு கோழி  பண்ணை பங்குதாரர்கள் ராஜேஷ், பிரபு, ரமேஷ், பிரவீண்குமார் ஆகியோரை கைது ஈரோடு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
அவர்களை கோவை  நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்திய  காவல்துறையினர் பின்னர் சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட 24 ஈமு கோழி பண்ணை நிறுவனத்தை சேர்ந்த 50 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.