Published:Updated:

`மருத்துவரும் துப்புரவுத் தொழிலாளியும் ஒரே ஆடை அணிவதில் என்ன தப்பு?' - அரசு மருத்துவரின் கேள்வி

`மருத்துவரும் துப்புரவுத் தொழிலாளியும் ஒரே ஆடை அணிவதில் என்ன தப்பு?' - அரசு மருத்துவரின் கேள்வி
`மருத்துவரும் துப்புரவுத் தொழிலாளியும் ஒரே ஆடை அணிவதில் என்ன தப்பு?' - அரசு மருத்துவரின் கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றுபவர், அனுரத்னா. இவருடைய ஃபேஸ்புக் பதிவு பலரையும் ஈர்த்துள்ளது. அவருடைய மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர் எனப் பலரும் அணிய விரும்பிய ஒரே மாதிரியான ஆடையைத் துப்புரவுத் தொழிலாளர்களையும் அணியவைத்து அசத்தியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரான அனுரத்னாவிடம் பேசினோம்.

`மருத்துவரும் துப்புரவுத் தொழிலாளியும் ஒரே ஆடை அணிவதில் என்ன தப்பு?' - அரசு மருத்துவரின் கேள்வி

ஆஸ்பத்திரியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தா, எல்லோரும் ஒரே மாதிரி ஆடைகள் உடுத்திட்டு வர்றது இயல்பான ஒன்றுதான். வேலை முடிஞ்சதுக்குப் பிறகுதான் விழாக்களைக் கொண்டாடுறோம். அப்படி, இந்த முறை எல்லோருக்கும் ஒரே மாதிரி ஆடைகள் வாங்கும்போது, துப்புரவுத் தொழிலாளிகளுக்கும் அதே ஆடையை வாங்கச் சொன்னேன். மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நானும், என் மருத்துவமனையில் துப்புரவு வேலை பார்க்கக்கூடிய பெண்ணும் ஒரே ஆடை அணிவதில் என்ன தப்பு இருக்கு?. ஆனா, சிலர் அதை ஏற்க மறுத்தாங்க. அவங்களை நான் பொருட்படுத்திக்கலை. என்னைப் பொறுத்தவரை பாலினப் பாகுபாடு மட்டுமில்லைங்க, பணி பாகுபாடும் பார்க்கக் கூடாது. என் வீட்டில் நான்தான் கழிவறையைச் சுத்தம்செய்றேன். இதெல்லாம் இழிவான செயல் கிடையாதே!. ஒரு நாள் அவங்க துப்புரவு வேலை பண்ணலைனா மருத்துவமனை சுத்தத்திற்கு யார் பொறுப்பு... வேலைபார்க்கும்போது அவங்க, அவங்க யூனிஃபார்மை போட்டுட்டுத்தான் வேலை பார்க்கிறோம். வேலை முடிஞ்சு எல்லோரும் ஒற்றுமையா நிகழ்ச்சி நடத்தும்போது அதில் மட்டும் எதுக்கு வித்தியாசம்னு எனக்குத் தோணுச்சு. எல்லோரும் சமம் என்கிற எண்ணம் எல்லோருக்குள்ளேயும் வரணும்ங்கிறது தான் என் ஆசை என்றார்.

Vikatan