Published:Updated:

மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறதா? - சேலம் வனத்துறையைச் சுற்றும் சர்ச்சை

மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறதா? - சேலம் வனத்துறையைச் சுற்றும் சர்ச்சை
மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறதா? - சேலம் வனத்துறையைச் சுற்றும் சர்ச்சை

சேலம் உயிரியல் பூங்கா வாயிலில் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் மாற்றுத்திறனாளி ஒருவரின் கடையைத் திடீரென காலிசெய்யச் சொல்லி வனத்துறை நெருக்கடி கொடுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அந்தப் பகுதியில் பலர் கடைவைத்து நடத்திவரும் நிலையில், தனது கடையை மட்டும் காலிசெய்யச் சொல்வதாக வனத்துறைமீது புகார் கூறுகிறார், பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வராஜ்.

மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறதா? - சேலம் வனத்துறையைச் சுற்றும் சர்ச்சை
மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறதா? - சேலம் வனத்துறையைச் சுற்றும் சர்ச்சை

 செல்வராஜிடம் பேசியபோது, ''நான் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவன். ஏற்காடு மலையில் உள்ள கருங்காலி மலைக்கிராமம் என்னுடைய சொந்த ஊர். விபத்தில் வலது கால் இழந்து மாற்றுத் திறனாளியாக இருக்கிறேன். என் மனைவி பெயர் பூங்கொடி. எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள்.
நான் ஒரு ஆண்டுக்கு முன்பு சேலம் குருவம்பட்டி உயிரியல் பூங்காவில் பொட்டிக்கடை வைத்துக்கொள்ள சேலம் வனத்துறையில் அனுமதிபெற்று, மாதம் 5000 வாடகை கொடுத்து நடத்திவந்தேன். இந்தக் கடையில் கிடைக்கிற சொற்ப வருமானத்தை நம்பி என் குடும்பம் பிழைத்துவருகிறது. இதை விட்டால் எனக்கு வேறு தொழில் செய்ய முடியாது. இந்நிலையில், திடீரென கடந்த வாரம் கடையை காலிப்பண்ணச்  சொல்லி விட்டார்கள்.

இந்தக் கடையை நம்பி ரூ.50,000-க்கு சரக்குகள் வாங்கிவிட்டேன். இதனால், என் வாழ்வாதாரம் இழந்து,

மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறதா? - சேலம் வனத்துறையைச் சுற்றும் சர்ச்சை

நஷ்டமும் ஏற்படும் சூழ்நிலையில் தவிக்கிறேன். படிப்பறிவு இல்லாத மாற்றுத்திறனாளியான என்னால் எப்படி இதை எதிர்க்கொள்ளுவதென்றே தெரியவில்லை. உயிரியல் பூங்காவிற்கு வெளியே பலர் கடை வைத்திருக்கிறார்கள். நானும் ஒரு மூலையில் கடை வைத்துக்கொள்ளுகிறேன் என்றாலும், சேலம் வனத்துறையினர் அனுமதிக்க மறுக்கிறார்கள்'' என்று கண்ணீர் மல்க கூறினார்.

இதுபற்றி சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கூறுகையில்,``மலைவாழ் சமுதாயத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி செல்வராஜுக்கு அரசே முன்வந்து வேலைவாய்ப்பை ஏற்பாடுசெய்து கொடுக்க வேண்டும். ஆனால், அவர் அரசை எதிர்பார்க்காமல் தன் சுய முயற்சியில் சேலம் வனத்துறையின் அனுமதி பெற்று உயிரியல் பூங்காவிற்குள் கடை நடத்தி, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், திடீரென காலிசெய்யச் சொல்லுவதை ஏற்க முடியாது. பூங்காவுக்கு வெளியே பலர் கடை நடத்திவருகிறார்கள். அப்பகுதியில் கடை நடத்த வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும்'' என்றார்.

இதுபற்றி சேலம் டி.எஃப்.ஓ பெரியசாமியிடம் கேட்டதற்கு, ``மத்திய வனவியல் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் கடை வைக்கும் அனுமதியை மத்திய அரசு ரத்துசெய்துவிட்டது. அதனால், கடையை எடுக்கச் சொன்னோம். மற்றபடி அவர்மீது எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் கிடையாது'' என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு