Published:Updated:

அடக்கத்துக்குப் பின் இறப்பில் சந்தேகம்! - மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது போலீஸ்காரரின் உடல்

ஜி.சதாசிவம்
அடக்கத்துக்குப் பின் இறப்பில் சந்தேகம்! - மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது போலீஸ்காரரின் உடல்
அடக்கத்துக்குப் பின் இறப்பில் சந்தேகம்! - மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது போலீஸ்காரரின் உடல்

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தில், போலீஸ்காரர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கொடுத்த புகாரை அடுத்து, புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து  பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 

அடக்கத்துக்குப் பின் இறப்பில் சந்தேகம்! - மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது போலீஸ்காரரின் உடல்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், தமிழ்ச்செல்வன் (36). இவர், பெண்ணாடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவந்தார்.  இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், நிறைமதி (3) என்ற பெண் குழந்தையும் வெங்கடேசன் என்ற 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். தமிழ்ச்செல்வனுக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. இதனால், அவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு  தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர், கடந்த மே மாதம் 28-ம் தேதி, திருச்சி கே.கே. நகர் அன்பழகன் தெருவில் உள்ள  தனியார்  குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்த்தனர்.  கடந்த 1-ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தமிழ்ச்செல்வன்  உயிரிழந்துவிட்டதாக திருச்சி  தனியார் குடிபோதை  மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் கூறி, அவரது உடலை குடும்பத்தினரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

உடலை பெற்றுக்கொண்டு சொந்த   ஊர் வந்த அவர்கள், நேற்று முன்தினம் தமிழ்செல்வனுக்கு இறுதிச்சடக்கு  செய்யும்போது, அவரது உடலில் காயங்கள் இருந்தது  தெரியவந்தது. இருந்தபோதிலும் உடலை அடக்கம் செய்தனர்.  தமிழ்ச்செல்வனின் உறவினர்களுக்கு, அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.  இதையடுத்து, அவர்கள் திருச்சி  தனியார் குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்குச் சென்று கேட்டபோது, அங்கிருந்தவர்கள் சரியான பதில் கூறிவில்லை. அந்த மையத்தில் பலர் இரும்புச் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் பார்த்துள்ளனர். பின்னர், அவரது உறவினர் பாலமுருகன், தமிழ்ச்செல்வன் ஆகியோர், இறப்பில் சந்தேகம் உள்ளது என்று திருச்சி கே.கே. நகர்  காவல் நிலையத்தில்  புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த தமிழ்ச்செல்வனின் உடலை  தோண்டி எடுத்து,  பிரேதப் பரிசோதனை  செய்ய முடிவுசெய்தனர்.

அடக்கத்துக்குப் பின் இறப்பில் சந்தேகம்! - மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது போலீஸ்காரரின் உடல்

இதனையடுத்து, நேற்று  காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில், காட்டுமன்னார்கோவில் அரசு 
மருத்துவமனை டாக்டர்கள், தமிழ்ச்செல்வன் உடலைத் தோண்டி எடுத்து, அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்தனர். திருச்சி கே.கே.நகர் போலீஸாரும் உடனிருந்தனர். புதைக்கப்பட்ட போலீஸ்காரர் தமிழ்ச்செல்வனின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்த சம்பவம்,  காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

Vikatan