Published:Updated:

`12-ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலை திரும்பப் பெறுக!' - எட்டையபுரத்தில் பாரதி மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

`12-ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலை திரும்பப் பெறுக!' - எட்டையபுரத்தில் பாரதி மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
`12-ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலை திரும்பப் பெறுக!' - எட்டையபுரத்தில் பாரதி மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

பன்னிரண்டாம் வகுப்பு 'தமிழ்' பாடப்புத்தகத்தில் பாரதியாரை காவிநிற தலைப்பாகையுடன் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாடநூலை  திரும்பப் பெற வலியுறுத்தியும், எட்டயபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

`12-ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலை திரும்பப் பெறுக!' - எட்டையபுரத்தில் பாரதி மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

 பாரதியார் என்றவுடனே நமது அனைவரின் கண்முன் தெரிவது அவரது வெள்ளைத் தலைப்பாகையும், முறுக்கு மீசையும்தான்.  ஆனால், புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள 12-ம் வகுப்பு பொதுத்தமிழ் பாடநூலின் முன்பக்க அட்டையில், ஒரு பெண் நடனமாடுவது, கோயில் படங்கள் மற்றும் பாரதியார் தலைப்பாகையுடன் இருப்பது போன்ற ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், பாரதியார் காவி நிறத்திலான தலைப்பாகை அணிந்துள்ளது போன்ற படம் அமைந்துள்ளது. பாரதியின் காவித் தலைப்பாகை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

`12-ம் வகுப்பு தமிழ்ப் பாடநூலை திரும்பப் பெறுக!' - எட்டையபுரத்தில் பாரதி மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

``பாடப் புத்தகத்தின்மூலம் காவியைத் திணிக்கும் செயலாக இதைப் பார்க்கமுடிகிறது. மாணவர்கள் மத்தியில் பாரதியாரைப் பற்றி வேறு கோணத்திலான சிந்தனையை உருவாக்குவதற்கான முயற்சி. பாரதியை காவிநிறத் தலைப்பாகையுடன் யாராவது பார்த்ததுண்டா?'' என பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் கூறியுள்ளார். தமிழ் ஆர்வலர்கள் பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனைக் கண்டித்து, மகாகவி பாரதியாரின் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ராஜேந்திரன் தலைமை வகித்தார். எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலர் மணிபாரதி, பாரதி ஆய்வாளர் இளசை மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாரதி ஆய்வாளர் இளசை மணியன்,  ``தேசியக் கவி பாரதியாரின் கருத்துகளை மாணவ மாணவியர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் காவிநிறத் தலைப்பாகையுடன் பாரதியின் படத்தை பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டையில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த பாடப் புத்தகத்தை திரும்பப் பெற்று, பாரதியின் முகம் முழுவதும் தெரியும் வகையில்  மாணவ மாணவியர்களுக்கு அடையாளம் காட்டிட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். ஆர்ப்பாட்டத்தில், பள்ளிக்கல்வித்துறையைக் கண்டித்தும் கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Vikatan