Published:Updated:

கூடங்குளம் அணுக்கழிவு மையம் - மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கூடங்குளம் அணுக்கழிவு மையம் - மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்
கூடங்குளம் அணுக்கழிவு மையம் - மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்

கூடங்குளம் அணுக்கழிவு மையம் - மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை சுற்றுச்சூழல்துறை தள்ளிவைத்துள்ளது. 

கூடங்குளம் அணுக்கழிவு மையம் - மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்புடன் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அதே இடத்தில் மேலும் நான்கு அணு உலைகளை அமைக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளதுடன், இரு அணு உலைகளுக்கான பணிகளைத் தொடங்கியிருக்கிறது. இதற்குச் சுற்றுப்புற மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

இந்த நிலையில், கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அணுக்கழிவு மையத்தை கூடங்குளம் வளாகத்தில் அமைக்கக் கூடாது எனத் தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அணுக்கழிவு மையத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சூழலில், அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட விஜயாபதி பஞ்சாயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜூலை 10-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், அணுசக்திக்கு எதிரான அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் கருத்துக் கேட்புக் கூட்டத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாகத் தெரிகிறது.   

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு