Published:Updated:

இந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம்! - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை 

இந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம்! - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை 
இந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம்! - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை 

ளங்கலை பட்டம் பெற இந்தி கட்டாயமாக எடுத்துப் படித்திருக்க வேண்டுமென்று பல்கலைக்கழக மானியக் குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் மீண்டும் குழப்பம் எழுந்துள்ளது.

இந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம்! - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை 

ஏற்கெனவே கஸ்தூரிரங்கன் அறிக்கையில் 6-ம் வகுப்பு முதல் 3-வது மொழியாக இந்தி மொழியை கட்டாயப் பாடமாக எடுத்துப் படிக்க வேண்டுமென்று கூறப்பட்டது,. தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இந்தத் திட்டத்தை அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு பின்வாங்கியது. இதற்கிடையே, பல்கலைக்கழக மானியக்குழு இளங்கலை பட்டம் பெற வேண்டுமென்றால் இந்தி மொழியை கட்டாயப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டுமென்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. முதல் கட்டமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. 

இந்தியாவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தி கட்டாயம்! - சர்ச்சையான யு.ஜி.சி சுற்றறிக்கை 

இந்தத் திட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தியதோடு, சுற்றறிக்கையை தீயிட்டுக் கொளுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடந்த ஜூலை மாதத்தில் பல்கலைக்கழக மானியக் குழு, இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்குவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய உத்தரவிட்டிருந்தது. தற்போது, கட்டாயப் பாடமாக்கவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்தி மொழியைத் திணிக்கும் திட்டங்கள் தமிழகத்தில் தோல்வியையே தழுவியுள்ளன. இந்தியா பன்மொழி கலாசார தன்மை கொண்டது. தனிப்பட்ட ஒரு மொழியைத் திணிக்கும் போக்கைக் கைவிட வேண்டும். தனிப்பட்ட முறையில் பல்கலைக்கழக மானியக் குழு இந்த முடிவை எடுத்துவிட முடியாது. பின்னணியில் அரசின் ஆதரவு இருக்கக் கூடும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Vikatan