Election bannerElection banner
Published:Updated:

’இரண்டு வருடங்களாக அணுஉலை சென்சார் செயல்படவில்லை!’ - சுப.உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு

’இரண்டு வருடங்களாக அணுஉலை சென்சார் செயல்படவில்லை!’ - சுப.உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு
’இரண்டு வருடங்களாக அணுஉலை சென்சார் செயல்படவில்லை!’ - சுப.உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு

’இரண்டு வருடங்களாக அணுஉலை சென்சார் செயல்படவில்லை!’ - சுப.உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு

கூடங்குளம் அணு உலையின் அழுத்தத்தைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்சார் கடந்த இரண்டு வருடங்களாகச் செயல்படவில்லை என வெளிநாட்டுப் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருப்பதாக சுப.உதயகுமாரன் தெரிவித்தார். 

’இரண்டு வருடங்களாக அணுஉலை சென்சார் செயல்படவில்லை!’ - சுப.உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை 10-ம் தேதி கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவதாகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது, அதனால் கருத்து கேட்புக் கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அணுசக்திக்கு எதிரான அமைப்புகளின் சார்பாக அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜுன் 29-ம் தேதி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனால், காவல்துறையினர் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இது மக்கள் விரோதச் செயல். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

காவல்துறையினர் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் போராட்டம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவில் முடிவு செய்வோம். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதா, நீதிமன்றத்தை நாடுவதா என்பதை விரைவில் முடிவு செய்வோம். 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுசக்தியின் அழுத்தத்தைக் கண்காணிக்கும் சென்சார், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்படவில்லை என வெளிநாட்டுப் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆபத்தான நிலையைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட சென்சார் செயல்படவில்லை என்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. 

சென்சார் செயல்படவில்லை என்பதைக்கூட அணு உலை நிர்வாகம் வெளியில் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறது. அதனால், மிகப் பெரிய விபத்தைச் சந்திக்க நேரிடுமோ என்கிற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. கூடங்குளத்தில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

’இரண்டு வருடங்களாக அணுஉலை சென்சார் செயல்படவில்லை!’ - சுப.உதயகுமாரன் பகீர் குற்றச்சாட்டு

கூடங்குளத்துக்குச் சமீபத்தில் சென்றிருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், `அணுக்கழிவு மையம் அமைப்பதால் எந்தவித ஆபத்தும் இல்லை’ என்றார். ஆனால், அவரது கட்சியினரே `அணுக்கழிவு மையம் அமையக் கூடாது' என அவரிடமே மனு அளித்தார்கள். அதனால் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. 

நாடாளுமன்ற விவாதங்களில்கூட அணுக்கழிவு குறித்து உண்மையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. அணுக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பம் இந்தியாவில் கிடையாது, சுற்றுச்சூழல் மாறுபாட்டுக்கும் புவிவெப்பமயமாதலைத் தடுக்கவும் அணுசக்தி ஒரு மாற்று சக்தியாக இருக்கும் என அணுசக்தி விஞ்ஞானிகள் தவறான தகவலைத் தெரிவித்து வருகிறார்கள். இதை மத்திய அரசும் உறுதிப்படுத்தி வருகிறது. ஆனால், அணு உலையை அமைப்பதிலிருந்து அணுக்கழிவை அப்புறப்படுத்தும் வரையிலும் தொடர்ச்சியாக மாசு ஏற்படும்’’ எனத் தெரிவித்தார். 

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு