Published:Updated:

`பா.ஜ.க அதைச்செய்தால், நான் போராடுவதை நிறுத்திவிடுகிறேன்!’ - சுப.உதயகுமார் சவால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`பா.ஜ.க அதைச்செய்தால், நான் போராடுவதை நிறுத்திவிடுகிறேன்!’ - சுப.உதயகுமார் சவால்
`பா.ஜ.க அதைச்செய்தால், நான் போராடுவதை நிறுத்திவிடுகிறேன்!’ - சுப.உதயகுமார் சவால்

`பா.ஜ.க அதைச்செய்தால், நான் போராடுவதை நிறுத்திவிடுகிறேன்!’ - சுப.உதயகுமார் சவால்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வரும் சுப.உதயகுமாரன், இந்தத் திட்டத்தை பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் முதல்வர்கள் நிறைவேற்றுவார்களா எனச் சவால் விடுத்துள்ளார். 

`பா.ஜ.க அதைச்செய்தால், நான் போராடுவதை நிறுத்திவிடுகிறேன்!’ - சுப.உதயகுமார் சவால்

கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன்கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இரு அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் என தேசிய அணுசக்திக் கழகம் அறிவித்துள்ளது. அதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பான விவகாரம் தொடர்பாக அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர் யாராவது ஒருவர் `இந்திய அணுமின் நிலையங்கள் அனைத்திலுமிருந்து வெளிவரும் அனைத்துக் கழிவுகளையும் எங்கள் மாநிலத்தில் ஆழ்நிலக் கருவூலம் (Deep Geological Repository) அமைத்து புதைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஒத்துக்கொண்டு, அதற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து  சட்டமன்றத்தில் முறைப்படி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்களா? 

அணுசக்தித் துறை அமைச்சரான பிரதமர் நரேந்திரமோடி தனது பா.ஜ.க ஆளும் மாநிலம் ஒன்றைத் தேர்வு செய்து, அந்த மாநிலத்தில்தான் `இந்திய அணுமின் நிலையங்கள் அனைத்திலுமிருந்து வெளிவரும் அனைத்துக் கழிவுகளையும் ஆழ்நிலக் கருவூலம் அமைத்து புதைக்கப் போகிறோம்’ என்று அதிகாரபூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பாரா? 

பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்களில் யாராவது ஒருவர் அல்லது பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் அறிவித்தால், அந்த கணத்திலிருந்து, சுப.உதயகுமாரன் ஆகிய நான், கூடங்குளம் அணுக்கழிவு மையம், அணுஉலைப் பிரச்னை என எதைப் பற்றியும் பேசவோ, போராடவோ மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.

`பா.ஜ.க அதைச்செய்தால், நான் போராடுவதை நிறுத்திவிடுகிறேன்!’ - சுப.உதயகுமார் சவால்

ஆனால், தேர்தல் தோல்வி மற்றும் பதவியிழப்பு விரக்தியால், ஏமாற்றத்தால் ஏதேதோ பேசுகிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. `கூடங்குளம் அணுமின் திட்டத்தை முதன்முதலில் எதிர்த்தது நான்தான்’ என்று என்னிடமும், இடிந்தகரை போராட்டச் சகோதரிகளிடமும் சொன்னார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அது போலவே, `ஒரு மருத்துவர் என்கிற முறையில் அணு உலைகளை ஆதரிக்கவே மாட்டேன்’ என்று என்னிடம் சொன்னார் பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் மருத்துவர். தமிழிசை சௌந்தரராஜன். பதவி, பணம், புகழ், அதிகாரத்துக்காக தங்கள் மனசாட்சியையே அடகுவைத்து, சொந்த மக்களுக்கே துரோகம் செய்து, இரட்டை வாழ்க்கை வாழும் தலைவர்களுக்கு வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று சுப.உதயகுமாரன் குறிப்பிட்டுள்ளார். 

அப்படி அறிவித்தால், அந்தக் கணத்திலிருந்து, சுப. உதயகுமாரன் ஆகிய நான், கூடங்குளம் அணுக்கழிவு மையம், அணுஉலைப் பிரச்னை என எதைப் பற்றியும் பேசவோ, போராடவோ மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.'

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு