Published:Updated:

கரூர் எஸ்.பி மாற்றப்பட்டதன் பின்னணியில் அமைச்சர்? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கரூர் எஸ்.பி மாற்றப்பட்டதன் பின்னணியில் அமைச்சர்? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்
கரூர் எஸ்.பி மாற்றப்பட்டதன் பின்னணியில் அமைச்சர்? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

கரூர் எஸ்.பி மாற்றப்பட்டதன் பின்னணியில் அமைச்சர்? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூர் எஸ்.பி மாற்றப்பட்டதன் பின்னணியில் அமைச்சர்? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

கரூர் மாவட்ட எஸ்.பி-யாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற விக்ரமன், வந்த நாளில் இருந்து பல அதிரடிகளை அரங்கேற்றி, குற்றவாளிகளை அடக்கி ஒடுக்கி வைத்தார். குறுகிய காலத்திலேயே பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற எஸ்.விக்ரமன் ஒன்றரை மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ``இதற்கு காரணம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான்" என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 


 

கரூர் எஸ்.பி மாற்றப்பட்டதன் பின்னணியில் அமைச்சர்? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

கடந்த அரவக்குறிச்சி சட்டமன்றத் இடைத்தேர்தலுக்கு முன்பு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், `எஸ்.பி ராஜசேகரன் (அப்போதைய எஸ்.பி) இருந்தால், தேர்தல் நேர்மையாக நடக்காது. அவரை மாற்றணும்' என்று வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, தேர்தல் ஆணையம் ராஜசேகரனை மாற்றியது. சென்னை நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி-யாக இருந்த விக்ரமன் கரூர் மாவட்ட எஸ்.பி-யாக பணியமர்த்தப்பட்டார். வந்த நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனங்களைக் கவர்ந்தார். இந்த நிலையில், அவரை பழையபடி சென்னை நுண்ணறிவுப் பிரிவுக்கே மாற்றப்படுவதாக உத்தரவு வர, கரூர் மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சரியாக கையாளாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பாண்டியராஜன், கரூர் மாவட்ட எஸ்.பி-யாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவும், சமூக ஆர்வலர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.


 

கரூர் எஸ்.பி மாற்றப்பட்டதன் பின்னணியில் அமைச்சர்? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

 இதுகுறித்து, நம்மிடம் பேசிய சாமானிய மக்கள் கட்சியின் தலைவர் சண்முகம், ``மணல் கொள்ளை, கள்ள லாட்டரி விற்பனை, கந்துவட்டிக் கொடுமை, சந்துக்கடைகளில் சட்டத்தை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் கொடுமைன்னு பல பிரச்னைகள் கரூர் மாவட்ட மக்களை வதைத்து வந்தன. ஆனா, விக்ரமன் சார் எஸ்.பி-யாக கரூருக்குப் பொறுப்பேற்றபிறகு, இரும்புக்கரம் கொண்டு அத்தனை தவறு செய்பவர்களையும் அடக்கி ஒடுக்கினார். வட்டித் தொழில் செய்பவர்களை அழைத்து கூட்டம் போட்டு, `அரசிடம் அனுமதி வாங்கி, அரசு நிர்ணயித்துள்ள வட்டியை மட்டும் மக்களிடம் வாங்க வேண்டும்; இல்லையென்றால், எல்லையில்லாமல் வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'னு எச்சரிக்கை செய்தார். இதனால், கந்துவட்டிக் கொடுமை குறைய ஆரம்பிச்சுச்சு. கள்ள லாட்டரி விற்பவர்களை போலீஸாரே வளர்த்துவிட்டார்கள். காவல்துறையில் தலைமையில் இருப்பவர்களும் அதை கண்டுக்கலை. ஆனா, எஸ்.பி விக்ரமன், கடுமையான நடவடிக்கை மூலம் கள்ள லாட்டரி விற்பனையை அடியோடு தடுத்துட்டார். லாரிகளில் ஆளுங்கட்சி அமைச்சர் பேரைச் சொல்லி காவிரியில் மணல் கொள்ளை தடையில்லாமல் நடந்துவந்தது. 


 

கரூர் எஸ்.பி மாற்றப்பட்டதன் பின்னணியில் அமைச்சர்? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

அதையும் விக்ரமன் தடுத்து, இரண்டு மாதங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 100 லாரிகளைக் கைப்பற்றினார். லாரி உரிமையாளர்களில் பலர் ஆளுங்கட்சியினர் என்றாலும், அசராமல் அனைவர்மீது வழக்கு பதிவு செய்து, சிறைக்கு அனுப்பினார். அதேபோல் முறைகேடாக, அரசு டாஸ்மாக் தவிர்த்து கரூர் நகரில் நூற்றுக்கணக்கான சந்து மதுபானக்கடைகள் இயங்கி வந்தன. 24 மணி நேரமும் அங்கு மது கிடைக்கும். இதை நடத்துவது பெரும்பாலும் ஆளுங்கட்சியினர்தான். அதேபோல், டாஸ்மாக்குகளைச் சுற்றியுள்ள பார்களை டாஸ்மாக் திறக்கும் நேரத்துக்கு முன்பாகவே திறந்து, அங்கு மது விற்றார்கள். அதை அடியோடு தடுத்து நிறுத்தினார் விக்ரமன்.

இப்படி எல்லா விஷயங்களில் அதிரடியாக செயல்பட்டு, குற்றங்களைப் பாதியாகக் குறைத்துவிட்டார். ஆனா, ஆளுங்கட்சினருக்கு, குறிப்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் பிடிக்கலை. அதோடு, அமைச்சர் சொல்லும் சிபாரிசுகளையே விக்ரமன் காது கொடுத்துக் கேட்கலைனு சொல்றாங்க. இதனால், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன் நாலைந்து முறை எஸ்.பியை சந்திச்சு, `நீங்க இப்படி தாம்தூம்னு செயல்படுறது அமைச்சருக்குப் பிடிக்கலை. இப்படியே போச்சுன்னா, நீங்க இங்க தொடர முடியாது' என்று சொன்னதா சொல்றாங்க. ஆனா, விக்ரமன் அதுக்கு அசராம, `கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்திருந்தா, உங்க மேல கேஸ் போடுவேன்' என்று சொல்ல, கப்சிப் என்று ஆகி, காலிசெய்தாராம் காளியப்பன். சமீபத்தில் மதுரை பைபாஸில் உள்ள புத்தாம்பூரில் புறக்காவல் நிலையம் ஒன்றைத் தொடங்கினார் எஸ்.பி. அப்போது பேசிய அவர், `என்னை யாரும் அடக்கமுடியாது; நான் இப்படிதான் நேர்மையா செயல்படுவேன். 


 

கரூர் எஸ்.பி மாற்றப்பட்டதன் பின்னணியில் அமைச்சர்? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

நான் இங்க வரும்போதே பொட்டியை ரெடியா கட்டிவச்சுக்கிட்டுதான் பணியாற்றி வருகிறேன். என்னை எங்க மாத்தினாலும், நான் கிளம்ப ரெடி. ஆனா, அங்கேயும் அப்படிதான் பணியாற்றுவேன்' என்று பேசினார். `வந்து  ஒன்றரை மாசம்கூட ஆகலை. அதுக்குள்ள இவருக்கு என்னாச்சு, ஏன் இப்படி பேசுறார்?'னு குழம்பிப் போனோம். அந்தப் பேச்சுக்கு அர்த்தம் இப்பதான் புரியுது. அமைச்சர் தனது சுயநலத்துக்காக எஸ்.பியை மாற்றியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். `விக்ரமன் சாரை மாற்றக் கூடாது'னு சி.எம் செல், கூடுதல் தலைமைச் செயலாளர்னு பலருக்கும் மனு அனுப்பியிருக்கிறோம். மீறி விக்ரமன் சாரை இடமாற்றம் செய்தால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த இருக்கிறோம். அதைவிடக் கொடுமையா, டி.எஸ்.பியா இருந்தபோது ஒரு பெண்ணை அறைந்து சர்ச்சைக்குள்ளான, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சரியாக செயல்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட பாண்டியராஜனை கரூர் மாவட்ட எஸ்.பி-யாக நியமித்துள்ளார்கள். அவர் இங்கே வந்தால், கரூரின் நிலைமை படுமோசமாகிவிடும். விக்ரமன் சாரை நாங்க இடமாற்றம் செய்யவிடமாட்டோம். அதற்காக, தொடர் போராட்டங்களைகூட நடத்த தயார்" என்றார் அதிரடியாக.


 

கரூர் எஸ்.பி மாற்றப்பட்டதன் பின்னணியில் அமைச்சர்? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் பேச முயன்றோம். நம்மிடம் பேசுவதை அவர் தவிர்த்தார். அவர் சார்பில் பேசிய சிலர், ``விக்ரமன் மாற்றப்பட்டது துறைரீதியான நடவடிக்கை. அதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனா, அதுக்கு அமைச்சர் நிச்சயம் காரணம் இல்லை. தி.மு.க-வினர் இட்டுக்கட்டும் கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று" என்றார்கள்.
 

எஸ்.பி விக்ரமன் மாற்றப்பட்ட இந்த விவகாரம் கரூர் மாவட்டத்திலும் சமூகவலைதளங்களிலும் பேசும் பொருளாக மாறி வருகிறது.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு