Published:Updated:

தலையில் ஏற்பட்ட காயத்தால் இளவரசன் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

விகடன் விமர்சனக்குழு

தர்மபுரி: தர்மபுரி இளவரசன், தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தர்மபுரியை சேர்ந்த திவ்யாவை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன், திவ்யாவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது, இனி இளவரசனுடன் வாழப்போவதில்லை எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மறுதினம் தர்மபுரியில் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார் இளவரசன். அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சாவில் மர்மம் இருப்பதாக இளவரசனின் உறவினர்கள் கூறி வந்த நிலையில், பிரேத பரிசோதனையில் தலையில் ஏற்பட்ட காயத்தால் இளவரசன் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

##~~##
இதனிடையே தேவைப்பட்டால் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்பதற்காக அவரது உடலை பாதுகாத்து வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.