Published:Updated:

சர்ச்சை தீவிரம்: 'பூஷன் CD போலியானது அல்ல'

புதுடெல்லி, ஏப்.21,2011

சர்ச்சை தீவிரம்: 'பூஷன் CD போலியானது அல்ல'

லோக்பால் சட்ட மசோதா வரைவுக் கூட்டுக்குழுவின் இணைத் தலைவரும் சட்ட வல்லுனருமான சாந்தி பூஷனை குற்றச்சாட்டும் சி.டி., போலியானது இல்லை என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.##~~##

இதனால், சமூக ஆர்வலர்கள் சார்பில் கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ள சாந்தி பூஷ்னுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வலுத்துள்ளது. 

சாந்தி பூஷன், முலாயம் சிங் யாதவ் மற்றும் அமர் சிங் ஆகியோர் தொலைபேசியில் பேசிக் கொள்வது போன்ற ஆடியோ டேப்களைக் கொண்ட சி.டி. ஒன்றை மர்ம நபர்களால் வெளியிடபப்ட்டது.

அதில், நீதிபதி ஒருவருக்கு ரூ.4 கோடி கொடுத்து காரியம் சாதித்துவிடலாம் என்று அமர்சிங் மற்றும் முலாயம் சிங்கிடம் சாந்தி பூஷன் கூறுவதாக ஆடியோ பதிவாகியிருந்தது.

இது சதிவேலைகள் கொண்ட சிடி என்று சாடிய பூஷன் அளித்த புகாரின் பேரில், இது தொடர்பாக காவல்துறையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மத்திய தடய அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்ட அந்த சிடி தொடர்பான ஆய்வறிக்கை டெல்லி போலீஸுக்கு இன்று வந்துள்ளது.

அதில், சிடியில் பதிவாகியுள்ள உரையாடல்கள் தொடர்ச்சியாக இருக்கிறது;  எவ்வித தடங்கல் இல்லாமல் தொடர்வதால், ஒட்டுவேலைகள் நடந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரத்தில், இந்த சி.டி. குறித்து அடுத்த கட்ட ஆய்வு மேற்கொள்ள வேண்டியதும் அவசியம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.