Published:Updated:

பீகார் பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு: தப்பி ஓடிய தலைமை ஆசிரியை சொத்துக்கள் பறிமுதல்!

பாட்னா: பீகாரில் மதிய உணவு உட்கொண்ட 23 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் பள்ளி தலைமை ஆசிரியையின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பீகார் அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிக்குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் உறுதியானது. சமைக்க பயன்படுத்தப்பட்ட உணவு தானியமும், சமையல் எண்ணெயும் பூச்சிக்கொல்லி மருந்து வைக்கப்பட்டிருந்த அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து சமையலுக்கு தேவையான பொருட்களை எடுத்து சமைக்கப்பட்ட உணவு விஷமாகிப்போனது.

சம்பவத்தினத்தன்று, சமையலுக்கு கொடுக்கப்பட்ட சமையல் எண்ணையிலிருந்து ஒருவித நெடி வீசுவதாக சமையல்காரர் கூறியபோதும், அதனையே சமையலுக்கு பயன்படுத்துமாறு தலைமை ஆசிரியை மீனாபாய் வற்புறுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பான அரசு விசாரணை அறிக்கையில், குழந்தைகள் உயிரிழப்புக்கு தலைமை ஆசிரியைத்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

##~~##
ஆனால் சம்பவம் நிகழ்ந்தவுடனேயே தலைமறைவாகிவிட்ட தலைமை ஆசிரியை இன்னும் போலீசாரிடம் பிடிபடாமல் உள்ளார். எனவே அவரை சரணடைய வைப்பதற்காக அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக சாரன் மாவட்ட காவல்துறை எஸ்.பி. சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.