Published:Updated:

மகன் சடலத்துடன் 3 நாள் இருந்த 83 வயது தந்தை

மகன் சடலத்துடன் 3 நாள் இருந்த 83 வயது தந்தை
மகன் சடலத்துடன் 3 நாள் இருந்த 83 வயது தந்தை
மகன் சடலத்துடன் 3 நாள் இருந்த 83 வயது தந்தை

சென்னை: மகன் சடலத்துடன் 83 வயதுடைய தந்தை ஒரே அறையில் மூன்று நாள் இருந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. காவல்துறையினர் தந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சென்னையில் 83 வயதுடைய புருஷோத்தமன் தனது மகன் மகேந்திரனுடன் (35) வசித்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையான மகேந்திரன் திடீரென இறந்துள்ளார்.

எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்த புருஷோத்தமனுக்கு மகன் இறந்தது தெரிந்தும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புருஷோத்தமன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததையடுத்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

##~~##
விரைந்து வந்த காவல்துறையினர், பூட்டிக் கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, மகன் சடலம் அருகே புருஷோத்தமன் இருந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மகன் சடலத்துடன் தந்தை ஒரு அறையில் 3 நாள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.