Published:Updated:

CWG ஊழல்: கல்மாடியை கைது செய்தது சிபிஐ

Vikatan Correspondent

புதுடெல்லி, ஏப்.25,2011

CWG ஊழல்: கல்மாடியை கைது செய்தது சிபிஐ

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, சுரேஷ் கல்மாடியை சிபிஐ அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். ##~~##

இந்தக் கைது தொடர்பான அறிவிப்பை, சிபிஐ அதிகாரிகள் பிற்பகலில் முறைப்படி வெளியிட்டனர்.

காமன்வெல்த் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடியிடம் நான்காவது முறையாக சிபிஐ அதிகாரிகள் இன்று காலை விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாகவே அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
 
காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த முறைகேடுகளில் கல்மாடிக்கு எதிராக போதுமான ஆதாரங்களைத் திரட்டி வைத்திருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய தண்டனைச் சட்டம் 120 பி மற்றும் 420 (குற்றச் சதி மற்றும் ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார்

ரூ.141 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணியை சுவிட்ஸர்லாந்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஆதரவாக சதிசெய்த குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக இரண்டாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று தாக்கல் செய்தது. அதில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

காங்கிரஸ் நடவடிக்கை...

கல்மாடி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.