Published:Updated:

நகைக்காக தாய், மகள் கொலை: சென்னை அருகே பயங்கரம்!

Vikatan Correspondent
நகைக்காக தாய், மகள் கொலை: சென்னை அருகே பயங்கரம்!
நகைக்காக தாய், மகள் கொலை: சென்னை அருகே பயங்கரம்!
நகைக்காக தாய், மகள் கொலை: சென்னை அருகே பயங்கரம்!

சென்னை: சென்னை அருகே தாய், மகளை கொன்றுவிட்டு 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மதுரவாயல் ஜானகி நகரில் வசித்து வருபவர் சாமிக்கண்ணு. இவர் மேட்டுக்குப்பத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஓட்டலுக்கு சாமிக்கண்ணு சென்றுவிட்டார். வீட்டில் மனைவி தேவி, மகள் பவித்ரா தனியாக இருந்துள்ளனர்.

அப்போது, அங்கு புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் முன் அறையில் இருந்த தேவியை முதலில் குத்திக் கொன்றுள்ளனர். பின்னர் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பவித்ராவை கொள்ளையர்கள் கொன்றனர்.

பின்னர், வீட்டில் இருந்த 40 பவுன் நகைகளை கொள்ளையடித்த திருடர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

##~~##
இது குறித்து தகவல் அறிந்த மதுரவாயல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்காக பட்டப்பகலில் தாய், மகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.