Published:Updated:

விநாயகர் சிலைகள் 2வது நாளாக கடலில் கரைப்பு!

விநாயகர் சிலைகள் 2வது நாளாக கடலில் கரைப்பு!
விநாயகர் சிலைகள் 2வது நாளாக கடலில் கரைப்பு!

விநாயகர் சிலைகள் 2வது நாளாக கடலில் கரைப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விநாயகர் சிலைகள் 2வது நாளாக கடலில் கரைப்பு!

சென்னை: சென்னையில் 2வது நாளாக பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை மக்கள் வைத்து வழிபட்டனர். அதேபோல், சென்னையில் 1800 இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

காவல் துறையினர், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைப்பதற்காக 14, 15, 16 மற்றும் 18-ந்தேதிகளில் அனுமதி கொடுத்திருந்தனர்.

மேலும், சென்னையில், பட்டினப்பாக்கம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் எடைமேடை, கார்போரைட் யுனிவர்செல் நிறுவனத்தின் பின்புறமுள்ள கடற்கரை, எண்ணூர் ராமச்சந்திரா நகர் ஆகிய 6 இடங்களில் மட்டும் சிலைகள் கரைப்பதற்காக ஒதுக்கி இருந்தனர்.

##~~##
இதையடுத்து, நேற்று நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. அதேபோல், இன்றும் 2-வது நாளாக சுமார் 1400 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் கடலில் கரைக்கப்பட்டன.

இதற்காக, சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் சுமார் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு