Published:Updated:

மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை தொடங்குகிறார் வைகோ!

மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை தொடங்குகிறார் வைகோ!
மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை தொடங்குகிறார் வைகோ!

சென்னை: மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  மேற்கொள்ள உள்ளார்.
 

மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை தொடங்குகிறார் வைகோ!

ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை, தாயகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க, பல்வேறு அறப்போராட்டங்களை ம.தி.மு.க. நடத்தி வருகிறது.

ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்னையில் "சுதந்திரத் தமிழ் ஈழம்தான் தீர்வு" என்பதைத்  திட்டவட்டமாகப் பிரகடனம் செய்து, அந்த விடியலை இலக்காகக் கொண்டு செயலாற்றுவதால், தமிழகத்திலும் தரணி எங்கும் தன்மானம் உள்ள தமிழர்கள் நெஞ்சில்  மதிக்கத்தக்க இடத்தைப் பெற்று இருக்கிறது.

ஸ்டெர்லைட் நாசகர நச்சு ஆலையை அகற்றுவது உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும்; கூடங்குளம் அணு உலையை அகற்றுவதிலும்; தமிழகத்தின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் அடியோடு நாசமாக்கும் விதத்தில் கடந்த ஆட்சிலும், இந்த ஆட்சியிலும் நடைபெற்று வருகிற ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை என பெரும் ஊழலை தடுத்து நிறுத்த வேண்டிய சூழலை உருவாக்கவும் சமரசமின்றிப் போராடி வருகிறது.

மது எனும் கொடிய அரக்கனின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஜனநாயகத்துக்கு கேடு விளைவிக்கும் ஊழலை அகற்ற, பொதுவாழ்வில் தூய்மையை நேர்மையை நிலைநாட்டப் பாடுபட்டு வருகிறது.

மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை தொடங்குகிறார் வைகோ!

துளி அளவும் வன்முறையில் ஈடுபடாத செயல்பாட்டினால் சாதி, மத வேற்றுமைக்கு அணுஅளவும் இடம் தராமல், மனிதநேயத்தோடு மக்களுக்குத் தொண்டு ஆற்றி வருவதால், நாட்டு மக்களின் நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் பெற்று நாளும் வளர்ந்து வருகிறது.

"ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு வாழ்வாதாரங்களுக்கும் கேடும் துரோகமும் செய்து வரும் ஊழல் சாம்ராஜ்யமாகிவிட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து, அதிகாரப் பீடத்தில் இருந்து அகற்றுவது ஒன்றே நமது உடனடி இலக்கும் கடமையும் ஆகும்" என்று விருதுநகர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் சூளுரைத்ததை முனைந்து செயலாற்றுவது என்றும்,

##~~##
"மக்களிடம் செல்" என்ற அண்ணாவின் மணிவாசகத்தை மனதில் நிறுத்தி, தமிழக மக்களிடம் நாட்டு நலனைக் காக்கும், ஜனநாயகக் கடமையாற்றவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் களப் பணிகளில் கழகம் ஈடுபடுவது என்றும்,
'மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை' பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்வதென்றும், அதற்கான ஆயத்தப்பணிகளை மாவட்டச் செயலாளர்கள் முன்னெடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
படங்கள்: வேங்கடராஜ்