Published:Updated:

சிக்கன நடவடிக்கை: தடையை மீறி 5 ஸ்டார் ஓட்டலில் நடந்த அரசு கூட்டம்!

விகடன் விமர்சனக்குழு
சிக்கன நடவடிக்கை: தடையை மீறி 5 ஸ்டார் ஓட்டலில் நடந்த அரசு கூட்டம்!
சிக்கன நடவடிக்கை: தடையை மீறி 5 ஸ்டார் ஓட்டலில் நடந்த அரசு கூட்டம்!
சிக்கன நடவடிக்கை: தடையை மீறி 5 ஸ்டார் ஓட்டலில் நடந்த அரசு கூட்டம்!

கோவை: மத்திய நிதியமைச்சக தடையினை மீறி, 5 நட்சத்திர ஓட்டலில் பணியாளார் தேர்வாணையத்தின் மண்டல இயக்குனர்கள் மாநாடு நடந்துள்ளது.

மத்திய அரசின் நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த 5 நட்சத்தி ஓட்டல்களில் கூட்டங்கள் நடத்துவது, தங்குவது உள்ளிட்ட சில ஆடம்பர நடவடிக்கைகளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு தடை விதித்தது.

மத்திய அரசு துறைகளின் நிதி ஆலோசகர்களுடன் ஆலோசித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அதன் பின்னர் சிக்கன நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சகம் மூலம் அறிவிப்பு ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டார்.

வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் அரசு கூட்டங்கள் தவிர பிற மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடத்த தடை விதிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

##~~##
இந்த சூழலில், கோவையில் மத்திய அரசு பணியாளார் தேர்வாணையத்தின் மண்டல இயக்குனர்கள் மாநாடு கடந்த இரு தினங்கள் நடந்தது. இந்த மாநாடு கோவை, அவினாசி சாலையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இரண்டாவது நாளாக நடந்த மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு தேர்வாணைய தலைவர் பட்டாச்சார்யா, தேர்வாணைய உறுப்பினர்கள், மண்டல இயக்குனர்கள் என பலருக்கும் ஐந்து நட்சத்திர விடுதியில்தான் அறை போடப்பட்டிருந்தது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த கூட்டத்துக்கு பல லட்சம் செலவிடப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, ‘ஐந்து நட்சத்திர விடுதியில் கூட்டம் நடத்த தடை இல்லை. தங்குதற்குத்தான் தடை உள்ளது’ என்றார்.

சிக்கன நடவடிக்கை என மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை காற்றில் பறக்கவிடப்பட்டு, இந்த கூட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ச.ஜெ.ரவி