Published:Updated:

அன்புமணியுடன், புலம் பெயர்ந்த தமிழர்கள் சந்திப்பு!

விகடன் விமர்சனக்குழு
அன்புமணியுடன், புலம் பெயர்ந்த தமிழர்கள் சந்திப்பு!
அன்புமணியுடன், புலம் பெயர்ந்த தமிழர்கள் சந்திப்பு!

ஜெனிவா: ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணியை புலம்பெயர்ந்த தமிழர்கள் சந்தித்தனர்.

அன்புமணியுடன், புலம் பெயர்ந்த தமிழர்கள் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும், பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் தலைவருமான அன்புமணி ஜெனிவா சென்றுள்ளார். நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தின் இரு அமர்வுகளிலும் அவர் கலந்து கொண்டார். இன்றைய கூட்டத்திலும் பங்கேற்கும் அவர் இலங்கை இனப் பிரச்னை குறித்தும், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்ற உள்ளார்.

##~~##
நேற்றைய நிகழ்ச்சிகளின் இடையே இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் மருத்துவர் அன்புமணியை சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த ஆணையிடும்படி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வலியுறுத்தும்படி கேட்டுக் கொண்டனர். ஈழத் தமிழர்கள் நலனில் பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் காட்டி வரும் அக்கறைக்காக அன்புமணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இலங்கை இனப்பிரச்னைக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு என்று வலியுறுத்தி வருவதற்காக பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து, இலங்கைப் போரின் போது சிங்களப் படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்கு ஆதாரமான புகைப்படங்கள், பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட 3500-க்கும் அதிகமான புகைப்படங்களைக் கொண்டு ஐ.நா. மனித உரிமை ஆணைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை அன்புமணி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பின்னர், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அவர்களின் கோரிக்கைகள் ஆகியவற்றை விளக்கும் ‘எங்களை வாழ விடுங்கள்’ என்ற தலைப்பிலான புத்தகத்தையும் அன்புமணி வெளியிட்டார்.