Published:Updated:

ஏற்காடு வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க பரிசீலனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏற்காடு வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க பரிசீலனை!
ஏற்காடு வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க பரிசீலனை!

ஏற்காடு வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க பரிசீலனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஏற்காடு வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க பரிசீலனை!

சேலம்: ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

சேலம் மாவட்டம், ஏற்காடு (தனி) தொகுதியின் எம்.எல்.ஏ.வான எஸ்.பெருமாள், கடந்த ஜூலை 18ஆம் தேதி மரணம் அடைந்தார்.

காலியாக உள்ள இந்தத் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி, புதிய உறுப்பினரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி.

இதனால், ஏற்காடு தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

‘‘வோட்டர் வெரிபையபிள் பேப்பர் ஆடிட் டிரையல் சிஸ்டம்’’ எனப்படும் இந்த இயந்திரங்களை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

##~~##
தேர்தலில் வாக்குப்பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு, தாங்கள் நினைத்த நபருக்கு சரியாக வாக்கினைச் செலுத்தினோமா, இல்லையா என்கிற சந்தேகம் எழுவதுண்டு.
இதனைப் போக்கும் வகையில், வாக்களிப்போருக்கு, அவர்கள் செலுத்திய வாக்கை சரிபார்த்துக் கொள்ளும் வகையில் ஒப்புகைச் சீட்டு அளிக்கும் முறையை அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
நாகாலாந்தில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற நோக்சென் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முதன் முறையாக இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு