Published:Updated:

2வது நாள் பயணத்தை தொடங்கினார் வைகோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
2வது நாள் பயணத்தை தொடங்கினார் வைகோ!
2வது நாள் பயணத்தை தொடங்கினார் வைகோ!

2வது நாள் பயணத்தை தொடங்கினார் வைகோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி: மக்களை நேரடியாக சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தின் 2வது நாள் பயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஸ்ரீவைகுண்டத்தில் தொடங்கினார்.

2வது நாள் பயணத்தை தொடங்கினார் வைகோ!

கிராமம், கிராமமாக சென்று மக்களை நேரடியாகச் சந்திக்கும் மறுமலர்ச்சி பயணத்தை நடத்துவது என, அண்மையில் நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நேற்று மாலை 5 மணிக்கு தன் பயணத்தை வைகோ தொடங்கினார்.

2வது நாள் பயணத்தை தொடங்கினார் வைகோ!

இந்த பயணத்தின் 2வது நாளான இன்று மாலை 5 மணிக்கு, ஸ்ரீவைகுண்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தனது பயணத்தை தொடங்கி உரை நிகழ்த்தினார்.

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து, ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், அமலிநகர் ஆகிய ஊர்களின் வழியாக சென்று, ஆலந்தலையில் இரவு சுமார் 9.00 மணியளவில் தனது மறுமலர்ச்சி பயணத்தை முடிப்பார்.

-எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு