Published:Updated:

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு!
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு!

மதுரை: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு, மறுதேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 21 ஆம் தேதி நடத்தியது. இதில் தமிழ்ப் பாடத்துக்கான 'பி' வரிசை வினாத்தாளில் 47 வினாக்கள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மதுரை, கோ.புதூரைச் சேர்ந்த விஜயலெட்சுமி, சென்னை உயர்திமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

##~~##
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ''ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 21 ஆம் தேதி தமிழ் பாடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுகிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக மறுதேர்வு நடத்த வேண்டும். மறுதேர்வுக்கு புதிதாக விண்ணப்பம் பெறத் தேவையில்லை. அதோடு, ஏற்கனவே வழங்கிய நுழைவுச்சீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம்'' என தீர்ப்பளித்தார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு